கங்குவா படத்தின் பிரபலம் காலமானார்... பெரும் சோகத்தில் படக்குழுவினர்...!

கங்குவா திரைப்படத்தின் எடிட்டர் நிஷாத் யூசப் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

By :  ramya
Update: 2024-10-30 04:33 GMT

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இவர் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

அதற்கு பிறகு நடிகர் சூர்யா கமிட்டான திரைப்படம் தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கின்றது. இப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வரும் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று பிரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். கங்குவா படம் பீரியட் ஜானலில் உருவாகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.

முதலில் இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ்-ஆக உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் ஆனதால் கங்குவா திரைப்படத்தை நவம்பர் 14ஆம் தேதிக்கு மாற்றி வைத்தார்கள் படக்குழுவினர். இப்படி படத்தின் வேலைகள் மற்றும் ப்ரோமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பட குழுவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்திருக்கின்றது.

அதாவது கங்குவா திரைப்படத்தின் எடிட்டர் நிஷாத் யூசப் காலமாகியுள்ளார். அவருக்கு வயது ௪௩. இன்று அதிகாலை 2 மணி அளவில் கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் தனது குடியிருப்பில் அவர் இறந்து கிடந்திருக்கின்றார். இவர் கங்குவா திரைப்படம் மட்டுமில்லாமல் டோமினோஸ் தாமஸ் நடிப்பில் வெளிவந்த தல்லுமாலா போன்ற படங்களுக்கும் எடிட்டராக பணியாற்றி இருக்கின்றார். அவரின் திடீர் மறைவு கங்குவா படக்குழுவினர் உள்ளிட்ட திரையுலகினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Tags:    

Similar News