நல்ல சோல்மேட்! எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஓபன் ஆக பேசிய கெனிஷா
Kenisha: தற்போது கோலிவுட்டின் கிசுகிசுக்களில் முக்கிய இடம் பிடித்து இருப்பது ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்ஷிஸ் தான். இருவரும் காதலிப்பதாகவும் பலர் பேசி வரும் நிலையில் கெனிஷாவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோ ரவி மோகன் ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருக்கிறார். ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பெரிய டேமேஜாக மாறி இருக்கிறது. கடந்தாண்டு ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
பொதுவாக பிரபலங்கள் எல்லாமே விவாகரத்தினை அறிவித்தால் இருவரும் ஒரு மனதாக அறிவித்து விடுவார்கள். ஆனால் ரவி மோகன் விஷயத்தில் நடந்ததே வேறு விஷயம். அவர் விவாகரத்தினை அறிவிக்க மனைவி தனக்கு இது தெரியாத விஷயம் என்றார்.
அதே சமயத்தில் ரவி மோகனின் காரை ஓட்டி பைன் கட்டிய கெனிஷா பிரான்சிஸ் குறித்த விவகாரம் வெளியானது. ஆனால் ரவி மோகன் அவங்களை எப்படி இதில் பேசுகிறீர்கள்? என்னுடைய தோழி. அவங்க ஒரு பாடகி. பெரிய மனோ நிபுணர் அவங்களை இதில் சேர்க்காதீங்க என்றார்.
ஆனால் தற்போது ஐசரி கணேஷ் வீட்டில் திருமணத்தில் இருவரும் தம்பதியாக ஒரே வண்ண உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து வரவேற்பு விழாவிலும் இருவரும் ஜோடியாக வந்தனர். இதுகுறித்து ஆர்த்தி ரவி அவர் கணவராக சரியில்லை என்றும் எங்கள் மகனுக்காக அமைதியாக இருப்பதாகவும் அறிக்கை கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் கெனிஷா தன்னுடைய பேட்டி ஒன்றில், எனக்கு இரண்டு சோல்மெட் இருக்காங்க. ஒன்னு என் நெருங்கிய தோழி. இன்னொருவர் கோவமே படமாட்டாங்க. எங்களுக்கு இருக்கும் அண்டர்ஸ்டாண்டிங்கே வேற லெவல்.
சிம்பிளா சொல்லனும்னா நம்ம படிச்சதை வச்சு ஒரு முடிவில இருப்போம். ஆனா ஒருத்தர் திடீருனு வருபவர் ஐ ஓபனரா இருப்பாங்க. சேப்டி, செக்யூரிட்டி, ரெஸ்பெக்ட், ஹார்ட்லெஸ் பீலிங் இல்லாத எக்ஸ்பெக்டேஷன், எந்த பிரச்னையும் இல்லாமல் ஈசியா போகுது என்றார்.
ஆனால் அது யார் என்பதை குறித்து சொல்லாமல் சிரித்து மழுப்பி விட்டார். மேலும் தன்னை குறித்து ட்ரோல் செய்பவர் குறித்து பேசும்போது நெகட்டிவிட்டி பற்றி பேசுபவர்கள் என் பிரச்சனை இல்லை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமா இல்ல.
அதனால என் மேல அதை நீங்க வீசுறீங்க. உங்களோட பிரச்சனையை நீங்க தான் பாத்துக்கணும். அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அப்படிப்பட்டவர்களை குறித்து நான் கொஞ்சமும் யோசிக்கவே மாட்டேன். அப்பொழுதுதான் எந்நாளும் வளர முடியும் என தெரிவித்திருக்கிறார்.