மணிசார் மாதிரி இருந்தா கரெக்ட் டைமுக்கு வருவேன்.. கே.எஸ்.ரவிக்குமாரிடம் மாட்டிக் கொண்ட சிம்பு
simbu
தற்போது சோசியல் மீடியாக்களில் தக் லைஃப் பட டீமின் பேட்டிதான் வைரலாகி வருகின்றது. தொடர்ந்து கமல், சிம்பு, திரிஷா என படக்குழு படத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ஆனந்த விகடன் பேட்டியில் மணிரத்னமும் அவருடைய கருத்துக்களை பகிர்ந்துவருகிறார். அதுவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் சிம்புவுக்கு ஒரு முக்கியமான ரோலாக இருக்கும் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் டிரெய்லர் வெளியான பிறகுதான் தெரிந்தது கமலுக்கு இணையான ரோல் என்று. டிரெய்லரை பார்க்கும் போது நீயா நானா என்ற வகையில் கமலும் சிம்புவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது. இருவருமே பிறவியில் இருந்தே ஸ்டார் ஆனவர்கள்.
இருவருக்குமே சினிமா பற்றிய அத்தனை நுணுக்கங்களும் தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரே ஸ்கிரீனில் இருவரும் தோன்றியிருப்பது இன்னும் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தக் லைஃப் பட டீமை சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி எடுத்தார். அதில் சிம்புவுக்கு ஒரு கேள்வி என தன்னுடைய கேள்வியை ஆரம்பித்தார்.
அதில் சிம்பு நீங்கள் ‘ நான் ஏன் லேட்டா வர்றேன் தெரியுமா? எல்லாருமே நான் லேட்டாகத்தான் வருகிறேன் என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா? இப்போ மணி சார் மாதிரி கரெக்டான டைரக்டரா இருந்தால் அவர் முன்னாடியே வந்து லொக்கேஷன் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி இன்னிக்கு இந்த ஷாட் எடுக்க போறோம் என தெளிவா இருப்பாரு. அதுனாலதான் நான் கரெக்டா வந்தேன்னு சொன்னீங்க. சரவணா டைம்லயும் கரெக்டாதான வந்தீங்க’ என கேட்டார் ரவிக்குமார்.
அதற்கு சிம்பு ‘ஆமா. உங்க கிட்டயும் அப்படித்தான் சொல்றேன்’என கூற அதற்கு ரவிக்குமார் ‘கேட்டு வாங்க வேண்டியிருக்கு’ என கிண்டலாக கூறினார். ஆனால் சரவணா படத்தில் முதல் இரண்டு நாள்கள் சிம்பு லேட்டாகத்தான் வந்தாரு. ஆனால் அங்கு இருந்தவர்கள் சிம்புவிடம் சொல்லியிருப்பார்கள் போல ‘ நீங்க இல்லைனாலும் அவரு ஷாட் எடுக்குறாருனு’.அதிலிருந்து படப்பிடிப்பு முடியும் வரை கரெக்ட் டைமுக்கு வந்தார் சிம்பு என கமலிடம் சிம்புவை பற்றி ரவிக்குமார் கூறினார்.