மாதவனையே ஏமாற்றிய ஏ.ஐ... அனுஷ்காவிடம் பல்ப் வாங்கிய சம்பவம்..
Madhavan: பிரபல நடிகர் மாதவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தின் மூலம் ஏஐயிடம் ஏமாந்த விஷயத்தையும் அதற்கு பிரபல நடிகை அனுஷ்காவிடம் பல்பு வாங்கிய விஷயத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்திய காலமாக இந்தியாவில் ஏஐ புழக்கம் அதிகமாகி இருக்கிறது. இதனால் வெளியாகும் பல வீடியோக்களில் எது உண்மை எது உருவாக்கப்பட்டது என ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுகிறது.
பிரபல நடிகைகள் இதனால் அதிக பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். சமீபத்தில் கூட பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாச வீடியோவில் டீப் ஃபேக் செய்து வெளியிட்டு வைரலாக்கினர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து பல பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது கூட பிரபல நடிகர்களின் இளமைக்காலம், முதிய காலம், குழந்தை காலம் என வகைகளில் ஏஐ வீடியோ தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தான் தனக்கு பிடிக்கும் என பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ தெரிவித்தது போல ஒரு வீடியோ இணையத்தில் பரவி இருக்கிறது. இதை பார்த்த நடிகர் மாதவன் உண்மைதான் என நினைத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அதை வெளியிட்டு இருக்கிறார்.
ஆனால், நடிகை அனுஷ்கா இது குறித்து மாதவனுக்கு இந்த வீடியோ உண்மையில்லை. ஏஐ தயாரித்த ஒன்று என அவர் சொன்ன போது தான் தான் ஏமாந்து விட்டதாக மாதவனுக்கே தெரிந்திருக்கிறதாம். சாதாரண மனிதர்களை விட தற்போது பிரபலங்கள் கூட ஏஐக்கு ஏமாறும் சம்பவம் நடந்து வருகிறது.