மேடி- ஷாலினியை விட சூப்பர் ஜோடியாச்சே.. ‘அலைபாயுதே’ படத்தில் மணிரத்னத்தின் முதல் சாய்ஸ்
shalini
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் ஷாலினி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அலைபாயுதே. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் இந்த படத்தை இப்போது வரைக்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மணிரத்னத்தை பொறுத்த வரைக்கும் அவர் சினிமாவில் அடி எடுத்து வைத்த பிறகு சினிமா உலகம் ஒரு புது விதமான மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது.
புதிய ஒரு சினிமா உலகத்தை உருவாக்கினார் என்றே சொல்லலாம் .மாதவன் ஷாலினி ஆகிய இருவரின் படங்களில் முக்கியமான படமாக அலைபாயுதே திரைப்படத்தை குறிப்பிடலாம். இந்த படத்தின் வெற்றிக்கு மற்றும் ஒரு காரணமாக இருந்தவர் ஏ ஆர் ரகுமான். இப்போது இருக்கும் இளைஞர்களின் காதல் whatsapp வீடியோ கால் இப்படியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த படம் வெளியான காலத்தில் இருந்த இளைஞர்களின் காதல் எப்படியாக இருந்தது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கிய படமாக அலைபாயுதே திரைப்படம் அமைந்தது. தன்னுடைய காதலி எங்கிருந்தாலும் அவளை பார்த்து விட வேண்டும் என தெருத்தெருவாக ஓடிக் கொண்டும் ஏகப்பட்ட பேருந்துகளில் ஏறி இறங்கியும் தான் தன்னுடைய காதலியை பார்க்க நினைப்பான் காதலன்.
அப்படிப்பட்ட காதலை மையப்படுத்தி தான் இந்த படம் வெளியானது. இதில் மாதவனுக்கும் ஷாலினிக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி இதுவரை எந்த ஒரு ஜோடிக்கும் அமையவில்லை. இந்த நிலையில் மணிரத்னம் அலைபாயுதே திரைப்படத்தை பற்றிய அவருடைய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். தற்போது தக் லைஃப் திரைப்படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்ற மணிரத்னம் அலைபாயுதே படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பதை பற்றி கூறுகிறார்.
முதலில் அலைபாயுதே திரைப்படத்தை ஹிந்தியில் தான் எடுக்க நினைத்தாராம். அதில் ஷாருக்கான் மற்றும் காஜோல் இவர்களை வைத்துதான் அந்த படத்தை எடுக்க நினைத்திருக்கிறார். அதற்கான ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் பாம்பே ரயில்களில் எடுப்பது போல் திட்டமிட்டு லொகேஷன்களும் பார்த்து விட்டார்களாம். அதன் பிறகு தில் சே படத்தை எடுத்து முடிக்கும் பொழுது அலைபாயுதே படத்திற்கான கிளைமேக்ஸ் கிடைத்தது. அதன் பிறகு தான் அந்த படத்தை எடுத்தோம் என கூறி இருக்கிறார் மணிரத்னம்.