நான் வரலன்னு கொளுத்தி போடுவாங்க!. நம்பாத!. கிங் காங்கை கூல் செய்த வடிவேலு!....
Vadivelu: நடிகர் கிங் காங் 35 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கம் முதல் இப்போது வரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ரஜினி நடித்த அதிசயப்பிறவி படத்திலெல்லாம் இவர் நடித்திருக்கிறார். அந்த படத்தில் டேப் ரிக்கார்டரில் ரஜினி பாட்டு போட கிங் காங் பிரேக் டேன்ஸ் ஆடுவார். அதுதான் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
நடிகர் வடிவேலுவுடன் பல படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். சுறா, போக்கிரி, வாத்தியார், கருப்பசாமி குத்தகைக்காரார், இந்திரலோகத்தில் நா அழகப்பன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கந்தசாமி, தெனாலி ராமன் போன்ற படங்களிலும் வடிவேலுவுடன் இணைந்து நடித்து காமெடி செய்திருக்கிறார்.
சினிமாவில் வாய்ப்பு இல்லாத நேரங்களில் தன்னுடைய குழுவை வைத்து பல ஊர்களுக்கும் சென்று நடன நிகழ்ச்சியை நடத்துவார். அதில், ரஜினி உள்ளிட்ட பல நடிகர்கள் போல நடனமாடுவார். இவரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தனது மகள் திருமணத்திற்கு எல்லோரும் வந்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்ட கிங் காங் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜயகாந்த் பிரேமலதா, தமிழிசை, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், யோகிபாபு உள்ளிட்ட பலருக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார். அதில் மு.க.ஸ்டாலின், பிரேமலதா, தமிழிசை, விஷால் உள்ளிட்ட சிலர் மட்டுமே சென்றார்கள். மற்ற யாரும் போகவில்லை.
சினிமா நடிகர்களின் நிஜ முகம் இதுதான். அவர்கள் யாருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். கிங்காங்கிற்கு இது இப்போது புரிந்திருக்கும் என சினிமா பத்திரிக்கையாளர்கள் சொல்லி வருகிறார்கள். மற்றவர்களை விட்டுவிடலாம். ஆனால், வடிவேலு கூட இந்த திருமணத்திற்கு செல்லவில்லை.
இந்நிலையில், கிங் காங்கிடம் வடிவேலு பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. ‘நான் ஷூட்டிங்கில் இருந்ததால் வரமுடியவில்லை. நான் வரலன்னு கொளுத்திப் போடுவாங்க.. நம்பாத.. 8 கோடி மக்களின் பிரதிநிதியா முதல்வரே வந்தார். அது உன் உழைப்புக்கு கிடைச்ச மரியாதை’ என அதில் பேசியிருக்கிறார். அப்போது ‘நீங்கள் எப்போது மதுரை வருவீர்கள் என சொல்லுங்கள். குழந்தைகளை நான் அங்கு அழைத்து வந்து ஆசிர்வாதம் வாங்குகிறேன்’ என கிங் காங் சொல்ல, ‘கண்டிப்பா சொல்கிறேன்’ என வடிவேலு பேசியிருக்கிறார்.
வடிவேலுவுக்கு கிங் காங் கண்டிப்பாக பத்திரிக்கை வைத்திருப்பார். அவரை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவரின் வீட்டுக்கு பத்திரிக்கை சென்றிருக்கும். முதல்வர் போய்விட்டதால் நம்மை பேசுவார்கள் என்பதாலேயே வடிவேலு கிங் காங்கிடம் இப்படி பேசியிருக்கிறார். இல்லையெனில் அவர் இதை செய்திருக்கவே மாட்டார். அவரோடு நடித்த நடிகர்கள் நோய்வாய்பட்ட போதும் மரணமடைந்த போதும் அங்கு போகாதவர்தான் வடிவேலு’ என சிலர் சொல்கிறார்கள்.