கூலி 1000 கோடி அடிக்காது... அஜித், ஆதிக் காம்போ படும் பாட்டைப் பாருங்க!
அஜித், ஆதிக் கூட்டணியில் குட் பேட் அக்லி வெளியாகி சூப்பர்ஹிட் அடித்தது. மீண்டும் இதே கூட்டணியில் படம் என்றார்கள். அதற்கான பதில் என்னன்னு பார்க்கலாம். ஜனநாயகன், கூலி, அஜித், ஆதிக் கூட்டணி படம் என பல புதிய சினிமா தகவல்களைப் பற்றி பிரபல வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பாருங்க.
ரசிகர்கள் படம் நல்லா இல்லன்னா யாரா இருந்தாலும் திட்டித் தீர்த்துடுவாங்க. இன்னிக்கு சோஷியல் மீடியாவுல அவ்ளோ ஸ்பேஸ் இருக்கு. முன்னாடி குரூப் டிஸ்கஷன் இருக்கும். இன்னைக்கு அதெல்லாம் இல்லை. அதனாலதான் பெரிய பட்ஜெட் படம் சுமாராப் போகுது. சின்னப் பட்ஜெட் அறிமுக இயக்குனர் படங்கள் சக்கை போடு போடுது. தமிழ்சினிமா உலகில் தான் ஈகோ ஜாஸ்தியா இருக்கு. மற்ற மொழிகள்ல இது அவ்வளவா இல்லை. டைரக்டர்ஸ் கடைசி வரைக்கும் தயாரிப்பாளர்களுக்கே படத்தைப் போட்டுக் காட்டுறது இல்லை.
ஜனநாயகன் படத்துல 70 பர்சன்ட் பகவந்த் கேசரி இருக்கும். அதை அப்படியே எடுத்தா கூட ஹீரோயிசம்தான். ஒரு பெண்ணைத் தத்தெடுத்து வளர்க்குறாரு. எவ்ளோ தூரம் கொண்டு வர்றாருங்கறதுதான் கதை. கூலி படம் 1000 கோடி அடிக்க வாய்;ப்பே இல்லை. ஆனா ரஜினி படத்துல கூலி மிகப்பெரிய பிசினஸ் ஆகிடுச்சு.
படம் என்றால் கமர்ஷியலா இருக்கணும். பைக்கையும், காரையும் எடுத்துச் சுத்திக்கிட்டு இருந்தா மட்டும் படம் ஓடிடாது. எல்லா ரசிகர்களையும் கொண்டு வரணும். கிரிக்கெட்டை நாம உணர்வுப்பூர்வமா வீரர்களோட முகத்துல பார்க்கலாம். ஆனா கார் ரேஸ்ல பார்க்க முடியாது. அஜித் கார் ஓட்டுறாருன்னா பார்க்கலாம். அஜித்தை வச்சி ஆதிக் படம் எடுக்குறாரு.
எப் 1 சம்பந்தமான படத்துக்கு அஜித்தே தயாரிப்பாளரா இருந்து பண்ணலாம். வேற எந்த தயாரிப்பாளரும் முன் வரமாட்டாங்க. சம்பள பிரச்சனைதான். அஜித்தும், ஆதிக் ரவிச்சந்திரனுமே ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்குறாங்க. சம்பள பிரச்சனையால கட்டுப்படியாகலன்னு சொல்றாங்க. சத்யஜோதி, மைத்ரின்னு போறாங்க. கடைசியில தான் ரோமியோ பிக்சர்ஸ்க்கு வாராங்க. அஜித்துக்கும் அவங்களுக்கும் நல்ல புரிதல் உண்டு. ஆனாலும் அது ஃபைனல் ஆகலயே என்கிறார் அந்தனன்.