எவ்வளவு தோல்விப்படங்கள் கொடுத்தாலும் அஜித் மாஸா நிக்கிறாரே..? அதெப்படி..?
தமிழ்த்திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் தல அஜித் தான். இப்போது எந்தப் பட்டமும் எனக்கு வேண்டாம் என தைரியமாக சொன்னார். எனக்கு ஏகே என்றும் அஜித்குமார் என்றும் அழைத்தாலே போதும் என்றார். இவர் இப்படி இருக்க அதன்பிறகுதான் கமலும் இதுபோன்று எனக்குப் பட்டம் எதுவும் தேவையில்லைன்னு துறந்தார். அஜித்துக்கு பல தோல்விப்படங்கள் தொடர்ந்தாலும் கூட இன்னும் பேரும் புகழுடனும் கொஞ்சம் கூட அசராமல் நிக்கிறாரே என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அதற்கான பதிலைப் பார்க்கலாமா...
எத்தனை தோல்விகளைக் கொடுத்தாலும் அஜித் ரசிகர்கள் மனம் தளராமல் எதையும் எதிர்பார்க்காம அவர் பின்னாடி நிக்கிறாங்களே... அதுக்கு என்ன காரணம்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.
நமக்கு ஒருவரைப் பிடிச்சிடுச்சுன்னா எதுவுமே நமக்குத் தெரியாது. அவரை ஒரு வெற்றிகரமான மனிதராகத்தான் நாம பார்ப்போம். அஜித்தைப் பொருத்தவரைக்கும் கோடிக்கணக்கில் ரசிகர்களை அவர் குவித்து வைத்து இருக்கிறார். அந்த ரசிகர்கள் எல்லாரும் அந்தளவுக்கு அவரை நேசிக்கிறாங்க. அப்படி இருக்கும்போது அந்தத் தோல்வி ஒரு சதவீதம் கூட அவர்களைப் பாதிக்காது என்பதுதான் உண்மை. இது எல்லாத்தையும் தாண்டி அஜித் தன்னம்பிக்கையின் உச்சம்.
அப்படிப்பட்ட நடிகருடைய ரசிகர்களுக்கும் அந்தத் தன்னம்பிக்கை இருக்கத்தானே செய்யும் என்று பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன். 2015ல் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை, விடாமுயற்சி என பல தோல்விப்படங்கள் வந்தன. விசுவாசம், துணிவு, குட் பேட் அக்லி ஆகியவைதான் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர் மன்றத்தை வேண்டாம் என்று கலைத்தவர் அஜித் தான். ஆனாலும் ரசிகர்கள் அஜித் படம் என்றாலே கொண்டாடித் தீர்த்து விடுகிறார்கள். அஜித் இவ்வளவுக்கும் படங்களில் மட்டும் நடிக்கவில்லை. கார்இ பைக் ரேஸ் என்று சுற்றிக் கொண்டே இருக்கிறார். அதற்கான பந்தயங்களிலும் கலந்து கொள்கிறார். இருந்தாலும் அஜித் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்ளோ வரவேற்பு உள்ளது.