அஜித், விஜய், ரஜினிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்... டைரக்டரை தேர்வு செய்வது எப்படி?

By :  SANKARAN
Published On 2025-07-13 18:45 IST   |   Updated On 2025-07-13 18:45:00 IST

சமீபகாலமாக விஜய் கூட ஒரு டைரக்டர் படம் பண்ணினாருன்னா அடுத்ததாக ரஜினி கூடவும் சேர்ந்து பண்றாரு. உதாரணத்துக்கு விஜய் கூட மாஸ்டர், லியோன்னு 2 பெரிய ஹிட்டைக் கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்போ ரஜினி கூட சேர்ந்து கூலி பண்றாரு. அதே மாதிரி ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். அடுத்ததாக ரஜினியோட டைரக்டர் சாய்ஸ் லிஸ்ட்ல இருக்கறதா சொல்றாங்க. இதுக்கு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க.

விஜயை வைத்து இயக்குற இயக்குனர்களை ரஜினி நம்மை வைத்தும் இயக்கணும்னு நினைக்கிறாரு. அதுவும் நடக்குது. விஜயை வைத்து படம் பண்ணும் இயக்குனர்கள் நாம அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கணும்னு நினைக்கிறாங்க. அதனால அதைநோக்கி அவர்கள் நகரும் முயற்சிகளும் நடக்குது.

என்ன காரணம்னா தமிழ்சினிமாவுல இன்றைக்கு உச்சமாக இயக்குனர்கள் நினைப்பது ரஜினியைத் தான். அவரை இயக்கி விட்டால் நம்மோட இலக்கை அடைஞ்சிட்டோம்கற திருப்தி அவங்களுக்குக் கிடைக்குது. விஜயை வைத்துப் படம் இயக்கும்போது ரஜினியை நெருங்குவது ஈசி. ரஜினியும் இந்த இயக்குனர் நம்மை வைத்துப் படம் பண்ணமாட்டாரான்னு நினைப்பதும் உண்டு.

இதுல இன்னொரு விசேஷம் என்னன்னா விஜயை வைத்து படம் பண்ணும்போது அவரே அந்த இயக்குனர்களிடம் ரஜினி சாருக்குக் கதை வச்சிருக்கீங்களா? நீங்க ட்ரை பண்ணலாமே. அவரும் உங்களுக்குப் படம் பண்ணுவாரேன்னு ஒரு உற்சாகத்தைக் கொடுக்கிறார்.


அது தப்பு இல்ல. ரஜினிக்கு என்ன இன்னைக்கு உள்ள பிரச்சனைன்னா நாம இந்த இடத்துல இருக்கோம். நம்மை வைத்து ஒருவர் படம் பண்றாருன்னா அது கமர்ஷியலா பெரிய வெற்றியை அடையணும். அதுதான் ரஜினிக்கு இருக்குற மிகப்பெரிய டாஸ்க்.

அப்படின்னா அவ்ளோ பெரிய வெற்றியைக் கொடுக்குற இயக்குனர்களை எப்படி அடையாளம் காண முடியும்? விஜய் மாதிரி ஒரு நடிகரை இயக்கி வெற்றி கொடுத்துட்டாருன்னா அது இவருக்கும் பொருந்தும். அப்படின்னா இவரு நம்மை வைத்து இயக்குறதுக்கு சரியான ஆள்னு தீர்மானிக்க முடியும்.

இன்னைக்கு ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு என்ன சவால்னா தொடர்ந்து அவங்களுக்கான இடத்தைத் தக்க வைக்கணும். அதுக்கு அவங்க இயக்குனர்களை செலக்ட் பண்றது பெரிய தலைவலியான விஷயம். சில சமயம் கதை கேட்கும்போது சூப்பரா இருக்கும். படமா பார்க்கும்போது அது மிஸ் ஆகி இருக்கும். அப்படின்னா அதிலும் கவனம் செலுத்தணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News