ஒரு தந்தையா விஜய்சேதுபதி கடமையைச் செய்யலையா? பிரபலம் சொல்றது உண்மையா?
விஜய்சேதுபதி மகன் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்தப் படத்தை ரசிகர்கள் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். அதுக்கு என்ன காரணம்னு பிரபல வலைப்பேச்சு பிஸ்மி சில தகவல்களைச் சொல்கிறார். பார்க்கலாமா...
சூர்யா சேதுபதி ஆரம்பத்துல சொன்ன ஸ்டேட்மெண்ட் ரசிகர்கள் மத்தியில் அவரைப் பற்றிய புரிதலை உண்டாக்கி விட்டது. அதனால் தான் பர்ஸ்ட் இம்ப்ரஸன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஸன்னு சொல்வாங்க.
அந்தவகையில் சூர்யா சேதுபதியோட ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்ததும் மக்கள் இவரை வேற மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அது ரிலீஸ் வரைக்கும் கன்டினியு ஆகிடுச்சு. அதுமாதிரி புரொமோஷன்ல வாயில சுவிங்கம் போட்டுக்கிட்டு ஷேக் ஹேண்டு கொடுக்குறது எல்லாம் கொஞ்சம் ஒருமாதிரி இருந்தது. சின்ன வயசுல யார் இருந்தாலும் அப்படித்தான் இருப்பாங்க.
ஒரு நடிகரின் பையன்கறதால அவரோட மேனரிசம் இயல்பானதுதான். அவருக்குப் பக்குவம் இல்லைன்னாலும் நாம ஒரு பக்குவத்தோட பார்த்திருந்தா இந்தளவுக்கு அவர்மீது வன்மத்தைக் கக்க வேண்டிய அவசியமில்ல. எனக்குத் தோணுன விஷயம் என்னன்னா நம்ம பையனுக்கு இதே மாதிரி இருக்கு. அதை சரி பண்ணனும்னு விஜய்சேதுபதி நினைக்கல.
அவரு என்ன சொல்றாருன்னா சிம்பு வரும்போதும் இதே மாதிரிதான் இருந்தது. அவருக்கு நெகடிவ் விமர்சனம் எல்லாம் வந்தது. ஆனா அதைத் தாண்டி இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆளா வந்துட்டாரு. அதனால இன்னைக்கு இப்படி வந்தாலும் பரவாயில்லைன்னு அவரது நண்பர்கள்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாராம்.
அது வந்து ஒரு சரியான ஒப்பீனியனா எனக்குத் தெரியல. ஒரு தந்தையா உங்கள் கடமையைச் சரியா ஆற்றியிருக்க வேண்டும் என்பதுதான் என்னோட கருத்து. படமா பார்த்தால் போன வாரம் வந்த 3 படங்களுமே வசூல் ரீதியா பெரிய வெற்றியை அடையவில்லை என்கிறார் வலைப்பேச்சாளர் பிஸ்மி.