சிவகார்த்திகேயன் படத்தில் இயக்குனர் மாற்றம்!. ஒரே ‘உள்ளே வெளியே’ கதையா இருக்கு!....
Sivakarthikeyan: அமரன் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயனின் சினிமா கிராப் மேலே ஏறியிருக்கிறது. 40லிருந்து 50 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த அவர் 70 கோடி சம்பளம் கேட்கிறார். அமரன் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது பற்றி பேசப்பட்டது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால், சிபி சக்ரவர்த்திக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் எழுந்ததாக சொல்லப்பட்டது. அதோடு, அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வசூலை பெறவும் பெரிய இயக்குனர்கள் பக்கம் போகலாம் என்கிற முடிவை சிவகார்த்திகேயன் எடுத்தார். ஏ.ஆர். முருகதாஸ், சுதா கொங்கரா போன்ற இயக்குனர்களை தொடர்பு கொண்டே அவரே பேசி அவர்களின் இயக்கங்களில் நடிக்க துவங்கினார். எனவே, சிபி சக்ரவர்த்தியை டீலில் வீட்டார்.
சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிக்கவிருந்து புறநானூறு படம் டிராப் ஆக ‘இந்த கதையில் நானே நடிக்கிறேன்’ என சொல்லி சிவகார்த்திகேயன் நடிக்கப்போனார். ஒருபக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்தார். தற்போது அந்த இரண்டு படங்களும் முடிவடையில் நிலையில் இருக்கிறது.
சிவகார்த்திகேயனை நம்பி பலனில்லை என்பதை புரிந்துகொண்ட சிபி சக்ரவர்த்தி ஆந்திரா போய் தெலுங்கு நடிகர் நானியிடம் ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கினார். ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனத்திலிருந்து அவர் வெளியேறிவிட அவருக்கு பதில் குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகரை கொண்டு வந்தார் சிவகார்த்திகேயன்.
ஆனால் மோகன்லால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் இந்த படமும் தள்ளிப்போவதாகவும், அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஃபேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சிபி சக்ரவர்த்தியே இயக்குகிறார். வினாயக் படம் தள்ளிப்போவதால் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையில் நடிக்க சிவகார்த்திகேயனும் சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கப்போவது வெங்கட் பிரபுவா?. வினாயக் சந்திரசேகரரா? இல்லை சிபி சக்ரவர்த்தியா? என்கிற குழப்பமெல்லாம் முடிவுக்கு வரும்.