தக் லைஃப் ஹீரோவே நான் தான்!.. கமலுக்கே விபூதி அடித்த பிரபலம்!.. இப்படி அசிங்கப்படுத்திட்டாரே!..
58 நிமிடம் கமல் சார் பேசுவாரு நான் 2 நிமிஷம் வெரி குட் சொல்லி முடிச்சிடுவேன் என நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.;
1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாக தக் லைஃப் அமைந்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரு பான் இந்திய படமாக உருவாகியுள்ள இப்படத்தை பல இடங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் 234வது படமான இதில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் ஒரு தமிழ் கேங்ஸ்டர் ஆக்ஷன் டிராமாவாக இது உருவாகியுள்ளது.
தக் லைஃப் படத்தில் மொத்த கால அளவு 2 மணி 45 நிமிடங்கள் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 5ம் தேதி அன்று உலகளவிலுள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தக் லைஃப் டிஜிட்டல் உரிமத்தை பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள நிலையில், இந்த படம் திரையரங்கு வெளியீட்டிற்கு 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நீயா நானா கோபிநாத், மணி சாரும் கமல் சாரும் ஒரு காபி ஷாப்பில் ஒரு மணி நேரம் பேசனும், ஆனால் சினிமாவைப் பற்றி பேசக்கூடாதுன்னா என்ன பேசுவிங்க என்று கேட்டதற்கு மணிரத்னம் 58 நிமிடம் கமல் சார் பேசுவாரு நான் 2 நிமிஷம் வெரி குட் சொல்லி முடிச்சிடுவேன், 58 நிமிடத்திற்கு அவர் என்ன வேணாலும் பேசுவாரு சினிமா இல்லனா பரவாயில்ல வரலாறு, அறிவியல் எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவாரு அவருக்கு எல்லாமே தெரியும் நம்ப கவலையே படாமல் காபி குடிக்கலாம் என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.