மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமியின் சொற்ப சம்பளம்… ஆனா இதெல்லாம் போங்கு!

Meiyazhagan: கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் படத்தில் அவர்கள் வாங்கிய சம்பள விவரங்கள் குறித்த சுவாரஸ்ய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வருமானம் அதிகரித்து விட்டது. இதனால் நடிகர்களும் தங்களது சம்பளத்தை எக்கசக்கமாக அதிகரித்துவிட்டனர். முன்பெல்லாம் ஒரு நடிகர் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்தால் அவர் சம்பளங்களை கணிசமாக குறைத்து கொள்வார்கள்.

ஆனால் தற்போது ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பளங்களை அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்தவகையில் தொடர் தோல்வி படங்களில் நடித்து வரும் கார்த்திக்கு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மட்டுமே ஹிட் படமாக இருக்கிறது.

இருந்தும் அவருக்கு 15 முதல் 20 கோடி வரை மெய்யழகன் படத்தில் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் அரவிந்தசாமி மெய்யழகன் படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார். அவர் நடிப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றும் இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு 5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். இப்படத்தினை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. நேற்று உலகமெங்கும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it