ரவிமோகனுக்கும் சிம்புவுக்கும் உண்மையிலேயே என்னதான் பிரச்சினை? ‘தனி ஒருவன் 2’ அவ்வளவுதானா?
simbu
ரவிமோகன் ஆர்த்தி பிரச்சினை ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையிலேயே சிம்புவுக்கும் ரவிமோகனுக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. சிம்புவால் இப்போது தனி ஒருவன் 2 படம் தற்காலிகமாக நிற்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ரவிமோகனை வைத்து அவரது அண்ணன் மோகன் ராஜா தனி ஒருவன் என்ற படத்தை எடுத்தார்.
படம் மிகப்பெரிய ஹிட். படத்தில் ரவிமோகனுக்கு ஜோடியாக நயன் நடித்தார். அரவிந்த்சாமியின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் வெற்றி எப்படியாவது தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என மோகன் ராஜா முயற்சித்தார். அதுவும் நடந்தது. அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. படத்திற்கான அறிவிப்பும் வெளியானது.
அதற்குள் மோகன் ராஜா லூசிபர் படத்தின் ரீமேக்கான காட் ஃபாதர் படத்தை எடுக்க போய்விட்டார். அதனால் தனி ஒருவன் 2 படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மோகன் ராஜாவை பொறுத்தவரைக்கும் தமிழில் அவர் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது.கடைசியாக வேலைக்காரன் படத்தைத்தான் அவர் எடுத்தார். இந்த நிலையில் மீண்டும் தனி ஒருவன் 2 படத்தை எடுப்பார் என்று நினைத்த நிலையில் வேறொரு அப்டேட் வெளியாகியிருக்கிறது.
மோகன் ராஜா திடீரென சிம்புவுக்கு கதை சொல்லியிருக்கிறாராம். அந்த கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்து போக படத்தின் தயாரிப்பாளரை தேடும் பணியில் சிம்பு இறங்கியிருக்கிறார். ஏற்கனவே அமலாக்கத்துறையினரின் பிடியில் ஆகாஷ் பாஸ்கரன் இருப்பதால் சிம்புவின் 49வது படத்தின் தயாரிப்பாளரையும் மாற்றும் பணியில் இருக்கிறார். இப்போது மோகன் ராஜா சிம்பு படத்திற்கும் ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டும்.
தனி ஒருவன் 2 படத்தின் மீது மோகன்ராஜா ஆர்வம் காட்டாதது ஒருவேளை இப்போது ரவிமோகனுக்கும் ஆர்த்திக்கும் இடையே நடக்கும் பிரச்சினையா என்று தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் ரவிமோகன் சிம்பு அடிக்கடி கிளாஸ் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் சிம்புதான் நடிக்க இருந்தது. ஆனால் அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என ரவிமோகன் சொல்லிவிட்டார். அதனால்தான் சிம்பு அந்த படத்தில் நடிக்க வில்லை என்று கூறப்பட்டது.
thanioruvan2
அதே போல் தக் லைஃப் படத்திலும் முதலில் ரவிமோகன் தான் நடிக்க இருந்தார். அதன் பிறகு சிம்பு உள்ளே வந்தார். அதனால்தான் ரவிமோகனும் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் சொல்லப்பட்டது. இப்போதும் இப்படி ஒரு குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.