விமானத்தில் இப்படி ஒரு விருந்தா? செமயா வாழுறாங்களே நயன்தாரா

By :  ROHINI
Published On 2025-05-19 15:37 IST   |   Updated On 2025-05-19 15:37:00 IST

nayanthara

Nayanthara: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் நயன்தாரா எப்பொழுதுமே டாப்தான். ஆரம்பத்தில் எப்போதும் போல ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர்களுடன் டூயட் ஆடிக்கொண்டு ஒரு படத்திற்கு ஹீரோயின் வேணுமே என்ற பட்சத்தில் நடித்து வந்தார் நயன்தாரா.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருடைய மார்கெட் என்ன என்பதை புரிந்து கொண்ட நயன் கதைகளில் கவனம் செலுத்த தொடங்கினார். குறிப்பாக பெண்களை மையப்படுத்தி அமையும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதில் அறம் திரைப்படம் அவருடைய கெரியரை தூக்கி நிறுத்திய படமாக அமைந்தது. தொடர்ந்து அப்படிப்பட்ட கதைகளிலேயே நடித்து வந்த நயனை லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து அவரை கொண்டாடினார்கள்.

குழந்தைகளுக்கு தனிகவனம்: அதனை அடுத்து விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் திருமணத்திற்கு பிறகு முன்பு மாதிரி படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. எதிர்பார்த்த அளவு வெற்றியாகவில்லை. சுமாரான வரவேற்பையே பெற்றது. இன்னொரு பக்கம் பிசினஸிலும் கவனம் செலுத்துகிறார் நயன். இதற்கிடையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகு தன் முழுக்கவனத்தையும் குழந்தைகளின் மீதுதான் செலுத்தி வருகிறார்.

படப்பிடிப்பிற்கு வரும் போதும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஊழியர்கள், அவர்களுக்கான செலவு என அனைத்தையும் தயாரிப்பு தரப்பிலிருந்துதான் நயன் பெற்றுக் கொள்கிறார் என்ற ஒரு சர்ச்சை அவர் மீது இருக்கிறது. அவ்வப்போது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவது, அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றுவது என பல வீடியோக்களை சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறார் நயன்.

தனி விமானம்; இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தனி விமானத்தில் தன் குழந்தைகளுடன் வெக்கேஷனை என்ஜாய் பண்ணுவதாக நயன் தெரிவித்திருக்கிறார். அதுவும் 40 ஆயிரம் அடி உயரத்தில் வீட்டிலிருந்து தயார் செய்த பிரியாணி உணவுகளுடன் வெக்கேஷனை சந்தோஷமாக கழித்து வருகிறோம். உண்மையிலேயே நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என அந்த ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார் நயன். 


Full View
Tags:    

Similar News