NEEKல் நடித்த ஹீரோ தனுஷூக்குச் சொன்ன சேதி! மச்சானைப் பார்த்தீங்களா?
தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் இன்று வெளியானது. படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் அச்சு அசல் தனுஷ் மாதிரியே இருக்கிறார். ஆனால் பாடி லாங்குவேஜ்தான் வேற. மற்றபடி ஜெராக்ஸ்னே சொல்லலாம்.
முக்கோண காதல் கதை: படம் வழக்கமான முக்கோண காதல் கதைதான். என்றாலும் தனுஷ் சொன்ன விதம் புதுமை. படத்தின் இரண்டாம் பாதி கோவாவுக்குச் செல்கிறது. பட்டையைக் கிளப்புகிறது. படத்தின் பிளஸ் என்னன்னா தனுஷ் கேரக்டர்களுக்கு ஏற்ப நடிகர்களைத் தேர்வு செய்து இருப்பதுதான்.
இந்தப் படத்தின் எப்டிஎப்எஸ் ஷோவிற்குப் பிறகு பவிஷ் எமோஷனலாகப் பேசி இருக்கிறார். என்னன்னு பாருங்க.
நல்ல ஃபீட்பேக்: எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. படம் பார்த்தவர்கள் எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. நல்ல ஃபீட்பேக் வந்துருக்கு. இதுக்கு எல்லாத்துக்குமே தனுஷ் சாருக்கு தான் நான் நன்றி சொல்லணும்.
தனுஷ் சாருக்கு மட்டும் தேங்க்ஸ்: வேற என்ன சொல்றதுன்னு தெரியல. தனுஷ் சாருக்கு மட்டும்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்னு நினைக்கிறேன் . அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கிறேன். அதற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்கிறார் நடிகர் பவிஷ் நாராயண்.
மச்சானுக்காக நடிக்கவில்லை: தனுஷ் தயாரித்து இயக்கிய படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். அவரது இயக்கத்தில் இது 3வது படம். எல்லாப் படங்களிலும் தான் ஒரு சின்ன ரோலுக்காவது வந்து தலையைக் காட்டுவார். ஆனால் இந்தப் படத்தில் தனது மச்சானுக்காக நடிக்கவில்லை. அவர் நடித்து பெரிய ஆளாக வந்தால் போதும் என்று பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்துள்ளார்.
படத்தில் மேத்யு தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். 2 கே கிட்ஸ்களைக் குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு அவர்களிடம் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன.