மாசம் 40 லட்சம் கேட்டு இப்படி மாட்டிக்கிட்டாரே ஆர்த்தி!..அப்ப ரவி சொன்னதெல்லாம் உண்மையா?!.

By :  MURUGAN
Update: 2025-05-21 09:22 GMT

#image_title

Ravi Mohan Arti: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து அவரிடமிருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான புகார்களை சொல்லி வருகிறார்கள். என்னை சுதந்திரமாக செயல்பட ஆர்த்தி அனுமதிக்கவில்லை. என் செலவுக்கு பணம் கொடுக்கவில்லை.

என்னை முழுக்க கட்டுப்படுத்துகிறார். ஆடம்பர செலவுகள் செய்து என்னை கடனாளியாக மாற்றினார். என்னை வைத்து என் மாமியார் தயாரித்த படங்கள் லாபத்தை பெற்ற போதும் நஷ்டம் என பொய் சொல்லி என்னை ஏமாற்றி 100 கோடி கடனுக்கு என்னை பொறுப்பேற்க வைத்தார்கள். என் பெற்றோருக்கு பணம் கொடுக்க கூட ஆர்த்தி அனுமதிக்கவில்லை.


உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நான் துன்புறுத்தப்பட்டேன் என்றெல்லாம் அறிக்கைவிட்டார் ரவி. அதோடு, கோவாவை சேர்ந்த பாடகி மற்றும் ஹீலர் கென்னிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார். அவரே என் சந்தோஷம் எனவும் சொல்லியிருக்கிறார். ஒருபக்கம், ரவியின் குற்றச்சாட்டுக்களை மறுத்த ஆர்த்தி ‘என் கணவரை நான் கட்டுப்படுத்தவில்லை. எங்கள் வாழ்வில் மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவருக்கு ஒளியாக இருந்தவர் எங்களின் வாழ்வில் இருட்டை கொண்டு வந்தார். விவகாரத்துக்கு விண்ணப்பிக்கும் முன்பே அந்த பெண்ணுடன் என் கணவர் பழக துவங்கிவிட்டார்.

திட்டமிட்டே வீட்டிலிருந்து வெளியேறினார். என்னிடம் கோபப்பட்டு போவதாக இருந்தால் அம்மா வீட்டுக்கு போகாமல் ஏன் அந்த பெண்ணின் வீட்டுக்கு போனார்?. ரவி மோகன் செல்வது எல்லாமே பொய் என்கிற ரீதியில் நேற்று பெரிய அறிக்கையை வெளியிட்டார் ஆர்த்தி. என் படிப்பையும், அறிவையும் பயன்படுத்தியிருந்தால் இப்போது இருப்பதை விட 2 மடங்கு வசதியாக இருந்திருப்பேன்’ என்றும் சொல்லியிருந்தார்.

இந்நிலையில், ரவி மோகன் - ஆர்த்தி விவகாரத்து வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் எனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு ஜூன் 12ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ரவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நேற்று ஆர்த்தியின் அறிக்கை வெளியான பின் ஆர்த்திக்கு ஆதரவு குரல்கள் எழுந்தது.


ஆனால், இப்போது மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் ஆர்த்தி கேட்டிருப்பது ட்ரோலில் சிக்கியிருக்கிறது. ‘அப்ப ரவி சொன்னது எல்லாம் உண்மைதானா?.. செலவுக்கு மாசம் 40 லட்சம் வேணுமா?.. இவ்வளவு பேராசையா?’ என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மாசம் 40 லட்சம் என 10 வருடங்கள் கொடுத்தால் 150 கோடி என சிலர் கணக்கு போடுகிறார்கள். சிலரோ, ‘ஆர்த்தி தொடர்ந்து அறிக்கை விட்டு பார்த்தார், பசங்க செண்டிமெண்ட் பேசிப்பார்த்தார். ரவி மனம் மாறவில்லை. எனவேதான் மாதம் 40 லட்சம் பணம் கேட்டிருக்கிறார்’ என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.


 சிலரோ, ‘ரவி கென்னிஷாவை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே ஆர்த்தி இவ்வளவு பணத்தை கேட்டு செக் வைத்திருக்கிறார்’ என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



 


Tags:    

Similar News