கைதி 2 மட்டுமல்ல மாஸ்டர் 2வும் லைன் அப்பில் இருக்கா? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே!
Master: விஜய் நடிப்பில் சூப்பர் அடித்த திரைப்படங்களில் மாஸ்டருக்கும் இடம் உண்டு. அப்படி ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார்.
விக்ரம் படத்தின் வெற்றிப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தை லோகேஷ் கையில் எடுத்ததற்கு இத்திரைப்படமும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
எப்போதுமே ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் தான். யாராலும் அடக்க முடியாத வில்லனை ஹீரோ அடக்கி தன்னுடைய மாஸ் சம்பவத்தை காட்டுவது தான் படத்திற்கு மிகப்பெரிய விஷயமாக அமையும்.
அப்படி இப்படத்தில் பவானி என்ற வில்லன் கேரக்டரின் நடிப்பு விஜய் சேதுபதி படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தார். அது மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜன் எல்லா படங்களும் எல் சி யு கதைகளத்துக்குள் வந்து கொண்டிருக்க மாஸ்டர் மட்டும் அதிலிருந்து தனிப்பட்டு வெளியானது.
இருந்தும் அதுவரை பார்க்காத விஜய் மீண்டும் ரெட்ரோ தோற்றத்துடன் வர விஜய் ரசிகர்களுக்கு அந்த வைப் மிகப்பெரிய அளவில் பிடித்தமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் தன்னுடைய ஜனநாயகன் திரைப்படத்துடன் கோலிவுட்டிலிருந்து வெளியேற இருக்கிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் விஜயின் மீண்டும் இயக்கும் ஆசை உங்களுக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கைது படம் மட்டுமல்ல மாஸ்டர் பூ திரைப்படத்திற்கும் என்னிடம் சரியான கதை இருக்கிறது.
அதை இயக்க வேண்டும் என எனக்கு மிகப்பெரிய ஆசை.. ஏனென்றால் விஜய் சாரை எனக்கு ஜேடியாக பார்ப்பது ரொம்ப பிடிக்கும். தன்னிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என்றும் அவருக்கு தெரியும். இனிமேல் அது நடக்குமா நடக்காதா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இப்படி எல்லா இயக்குனர்களும் விஜய்க்காக ஒரு கதை வைத்திருக்கும் நிலையில் அவருடைய முடிவு என்னவாக இருக்கும் என்பது அடுத்த ஆண்டு இறுதியில் தான் தெரியலாம்.