பிரபு படம் செய்த மேஜிக்... அப்புறம் வந்த 50 படத்துக்கும் அங்கே தான் சூட்டிங்! எந்த இடம்னு தெரியுமா?

By :  SANKARAN
Published On 2025-06-22 16:26 IST   |   Updated On 2025-06-22 16:26:00 IST

என் தங்கச்சி படிச்சவ 1988ல் வெளியான படம். பி.வாசு சூப்பரா இயக்கியுள்ளார். பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில தான் 70 சதவீதம் படப்பிடிப்பு நடத்தினாங்க. சத்தியவாக்கு, காவலுக்குக் கெட்டிக்காரன் படத்தையும் இங்கு தான் சூட்டிங் பண்ணினாங்க. 1992ல் உத்தமராசா சூட்டிங்குக்காக ஜமீன் ஊத்துக்குளியில தான் எடுத்தாங்க. பிரபுவும் யார் அவரைப் போய் பார்த்தாலும் சாப்பிட்டீங்களான்னுதான் கேட்பாங்க.

சேத்துமடை, சமத்தூர், மூணாறு, உடுமலைப்பேட்டையில் சூட்டிங் நடந்தது. இந்தப் படத்துல ஒரு பைட்ல ஜம்ப் பண்ணும்போது கால் முட்டில அடிபட்டது. எழுந்து நடக்க முடியாத நிலை. சூட்டிங் கேன்சல் ஆகி சென்னையில் போய் மருத்துவமனையில் அட்மிட் ஆகிட்டு வந்தாராம். அப்பாவை மாதிரி எந்த தயாரிப்பாளரும் தன்னால நஷ்டப்படக்கூடாதுன்னுதான் பிரபுவும் நினைப்பாராம்.

ஜமீன் ஊத்துக்குளி அரண்மனையைச் சேர்ந்த ஒரு வீட்ல சூட்டிங் நடத்துனாங்க. அது கிழக்குவாசல் படத்துல பச்சைமலைப்பூவு பாட்டுல எடுத்த அதே வீடுதானாம். காமெடி காட்சிகள் எடுத்தது எல்லாமே அங்கே தானாம். என் தங்கச்சி படிச்சவ படத்துக்காகவும் அங்கு தான் படப்பிடிப்பு நடந்ததாம். மறவன், சீதனம் படங்களிலும் சூட்டிங் அந்த ஊரு தானாம்.

பாவலரு பாட்டு பட சூட்டிங் அமராவதி அணைக்கட்டு, உடுமலை, மூணாறு உள்பட பல இடங்களில் எடுத்தாங்க. அந்த ஊரில் எடுக்கப்பட்ட என் தங்கச்சி படிச்சவ சூட்டிங்குக்குப் பின்னால 50 படத்துக்கு சூட்டிங் நடந்ததாம். இளையதிலகம் பிரபுவின் 100வது படம் ராஜகுமாரன். அதுவும் பொள்ளாச்சியில தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


1988ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் என் தங்கச்சி படிச்சவ. பிரபு, ரூபினி, சித்ரா, நாசர், கிட்டி, மோகன் நடராஜன், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். கங்கை அமரன் இசையில் பாடல்கள் செம மாஸ். நல்லகாலம் பொறந்துடுச்சு, எதிர்காலம், சும்மா சும்மா, பூவெல்லாம், மாமானு சொல்ல ஆகிய பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.

Tags:    

Similar News