டிராகன் இயக்குனருடன் மீண்டும் இணையும் பிரதீப்!. இது வேறலெவல் அப்டேட்!...

By :  Murugan
Update:2025-02-21 16:15 IST

Dragaon movie: ஜெயம் ரவியை வைத்து கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே சூப்பர் ஹிட். 16 வருடம் கோமாவுக்குள் போன ஒரு பள்ளி மாணவன் என்ன ஆனான்?. அவனது வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதை சுவாரஸ்யமாக கதை, திரைக்கதை அமைத்திருந்தார்.

இந்த படம் ஜெயம் ரவிக்கு முக்கிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் 3 வருடங்கள் கழித்து தானே ஒரு படத்தில் இயக்கி நடித்தார். அப்படி வெளியான லவ் டுடே திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. ஒரு படத்திற்கு கதை எழுத 3 வருடங்கள் ஆவதாக பிரதீப்பே கூறியிருந்தார்.

10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்து அப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்தது. எனவே, மீண்டும் பிரதீப்பை வைத்து ஒரு படத்தை தயாரிக்க ஆசைப்பட்டனர். அப்படி உருவான திரைப்படம்தான் டிராகன். இந்த படத்தில் பிரதீப் இயக்கவில்லை. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.


இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்திருக்கிறது. இப்படத்தை பார்க்க இளசுகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியான போது இது டான் படம் போலவே இருப்பதாக சிலர் சொன்னார்கள். ஏனெனில், கல்லூரியில் அலப்பறை செய்யும் இளைஞன். அவனை பிடிக்காத பிரபஷர் என டான் படம் போலவே காட்சிகள் இருந்தது.

ஆனால், படம் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது. பொறுப்பில்லாமல் சுற்று ஒரு கல்லுரி மாணவனின் வாழ்க்கை கல்லூரி வாழ்க்கைக்கு பின் என்ன ஆகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. இதை சுவாரஸ்யமாகவும், எமோஷனலாகவும் பதிவு செய்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறது படக்குழு.

இந்நிலையில், அஸ்வத் மாரிமுத்துவும், பிரதீப் ரங்கநாதனும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். ஆனால், அந்த படம் உருவாக இன்னும் 3 வருடங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. பிரதீப் இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 51வது திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

Tags:    

Similar News