பேன் இண்டியா ஸ்டாரா மாறிட்டாரே1. பிரதீப்பின் டியூட் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!...

By :  MURUGAN
Update: 2025-05-10 09:01 GMT

குறும்படங்கள் இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதன பல முயற்சிகளுக்கு பின் ஜெயம் ரவியை வைத்து கோமாளி எனும் படத்தை இயக்கினார். ஜெயம் ரவியே நினைக்காத அளவுக்கு இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் பின் மற்ற ஹீரோக்களை இயக்கமாட்டேன். நான் இயக்கினால் நான்தான் ஹீரோ என முடிவெடுத்தார் பிரதீப்.

அப்படி அவர் இயக்கி நடித்த லவ் டுடே படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த காலத்து இளசுகள் செல்போனை மாற்றிகொண்டால் என்ன நடக்கும் என்பதை ஜாலியாகவே காட்டியிருந்தார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் ஹிட் அடித்தது.

அதன்பின் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் டிராகன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம்தான் கயாடு லோகர் இப்போது கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியிருக்கிறார். டிராகன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, தொடர் 3 வெற்றிகளை கொடுத்தவராக பிரதீப் மாறிவிட்டார்.

டிராகன் படம் துவங்கிய போதே விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற படத்தில் நடிக்க துவங்கினார். இடையில் சில மாதங்கள் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இப்போது மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் பாடிய பாடல் ஒன்றும் ஹிட் அடித்தது.

இந்நிலையில்தான், டியூட் என்கிற படத்தில் பிரதீப் நடித்து வருவது இப்போது தெரியவந்திருக்கிறது. இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.



இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். டியூட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News