அடுத்தடுத்து பெத்த ப்ராஜெக்ட்டில் பிரதீப்!.. பேச்சு மட்டும்தான் இருக்கு செயல்ல ஒன்றும் காணமே..

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

By :  Ramya
Update: 2024-12-11 07:16 GMT

pradeep 

பிரதீப் ரங்கநாதன்:

குறும்படங்களை இயக்கி கலக்கி வந்த பிரதீப் ரங்கநாதன் பின்னர் நடிகர் ஜெயம் ரவியை வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு கோமாளி என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக லவ் டுடே என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.


இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இளைஞர்கள் மத்தியில் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இயக்குனர்களின் திரைப்படங்களில் பிஸியாக நடிப்பு வருகின்றார் பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதன் லைன் அப்:

லவ் டுடே திரைப்படத்திற்கு பிறகு மிகவும் பிஸியான நடிகராக மாறி இருக்கின்றார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படத்தை முடித்த கையுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் கடந்த ஒரு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது.

அதனை தொடர்ந்து அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த இரண்டு திரைப்படங்களின் அறிவிப்பு வெளியாகி பல நாட்களான நிலையில் படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகின்றது.

புதிய திரைப்படம்:

இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் அறிமுக இயக்குனரான கீர்த்தீஸ்வரன் என்பவருடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கீர்த்தீஸ்வரன் இயக்குனர் சுதா கொங்கரா அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது அவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார்.


இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இவர்கள் தமிழில் தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகின்றது.

மேலும் ப்ரேமலு திரைப்படத்தின் மூலமாக பிரபலமான மமிதா பைஜூ பிரதிப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்க இருக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற இருப்பதாகவும், விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது

Tags:    

Similar News