குடித்து விட்டு ஓட்டல்ல கடும் ரகளை... போதையில் அப்படியா கேட்டாரு விஜய் சேதுபதி?

By :  SANKARAN
Published On 2025-05-28 13:21 IST   |   Updated On 2025-05-28 13:21:00 IST

விஜய்சேதுபதி கஷ்டப்பட்டு சினிமாவில் வளர்ந்து தனக்கென ஒரு மார்க்கெட்டைப் பிடித்தார். ஆனால் அவர் பலகோடி கடன் தொல்லையால் கதை தேர்வு செய்யாமல் படங்களில் நடித்து தோல்விப்படங்களாகக் கொடுக்க ஆரம்பித்தார். இவர் ஆரம்பகாலத்தில் குடித்து விட்டு செய்த ரகளை குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க.

விஜய் சேதுபதி ஆரம்பத்துல குடும்ப கஷ்டம் காரணமா துபாய்க்கு வேலைக்குப் போனார். அவருக்கு சிறு வயது முதலே சினிமாவில் நடிக்கணும்னு ஆர்வம். துபாயில் வேலை பார்த்த அவருக்கு ஒரு கட்டத்துக்கு மேல வேலை பார்க்க முடியல. அப்புறம் அங்கே இருந்து கிளம்பி சினிமாவுல நடிக்கணும்னு வந்து விட்டார். ரொம்ப போராடி சின்ன சின்ன வேடங்கள்ல நடிக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல கூட்டத்துல ஒருவராகத் தான் வருவார். அப்புறம் அவருக்குக் கிடைச்ச வாய்ப்பு தான் சீனுராமசாமி இயக்கத்தில் வந்த தென்மேற்குப் பருவக்காற்று. அந்தப் படத்திற்குப் பிறகு நாளைய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். பீட்ஷா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படங்களில் நடித்தார். படங்கள் பெரிய ஹிட் ஆனது.

இதனால் தொடர்ந்து பல பெரிய தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்தாங்க. அந்த காலகட்டத்தில் விஜய்சேதுபதி நன்றியோடு பல வேலைகள் செய்தார். ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்த பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து கால்ஷீட் தேதி கொடுத்தார். சின்ன சின்ன கேமியோ வேடங்களில் நடித்தார்.

அந்தப் படங்கள் சரியாகப் போகாததால் மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. இந்தக் காலகட்டத்தில் விஜய்சேதுபதி பெரிய தப்பு பண்ணிட்டாரு. அவர் ஒரு 5ஸ்டார் ஓட்டல்ல போய் ரிசப்ஷன்ல உட்கார்ந்து 'நான் பெரிய நடிகன். என் படங்கள் நல்லா ஓடிருக்கு. எனக்குப் பிரியாணி இங்கே கொண்டு வந்து கொடுங்க'ன்னு கேட்டாராம்.

'இல்ல சார். பிரியாணி இங்கெல்லாம் கொண்டு வந்து கொடுக்க முடியாது. நீங்க ரெஸ்டாரண்ட் வாங்க. அங்க வந்து சாப்பிடுங்க'ன்னு அங்கே வேலை பார்த்தவர்கள் சொன்னாங்க. 'இல்ல. நான் அங்கெல்லாம் வர மாட்டேன். எனக்கு இங்கேயே பிரியாணியைக் கொண்டு வந்து கொடுங்க'ன்னு அடம்பிடிச்சி, சேட்டை, சண்டை எல்லாம் போட்டாரு.


உடனே கூட வந்தவங்க எல்லாரும் அவரை சமாதானப்படுத்தி கார் ஏறி வீட்டுக்கு அனுப்பினாங்க. இது அன்னைக்கு ரொம்ப பெரிய செய்தியாகி பத்திரிகைல எல்லாம் வந்துடுச்சு. அதுகுறித்து பத்திரிகையாளர்கள் எல்லாம் கேட்டபோது நான் தப்பு பண்ணிட்டேன். ஓவரா குடிச்சதால இந்த மாதிரி பண்ணிட்டேன். இந்த மாதிரி புகார் இனி எந்தக் காலத்திலும் வராதவாறு பார்த்துக்குவேன்னு சொன்னாரு. அந்த உத்தரவாதத்தை இன்னைக்கு வரைக்கும் விஜய்சேதுபதி காப்பாத்துறாரு என்கிறார் பாலாஜி பிரபு.

ஜூங்கா என்று ஒரு படத்தை சொந்தமாகத் தயாரித்தும் பெரிய அளவில் கடனாளியானார் விஜய் சேதுபதி. தொடர்ந்து கடனை அடைப்பதற்காக பல படங்களைக் கதை தேர்வு செய்யாமல் நடிக்க ஆரம்பித்தார். அதனால் பிளாப் ஆயின. கடைசியாக வந்த ஏஸ் படம் கூட தோல்வி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News