புருசனும் பொண்டாட்டியும் புரடியூசர இப்படி பந்தாடுறீங்களே.. மாட்டிக்கிட்டு முழிக்கும் பிரபலம்..
Nayanthara: தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக கதாநாயகியாக நடித்து அசதி வருகின்றார் நடிகை நயன்தாரா. ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படங்களும் பெரிய அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
விக்னேஷ் சிவனுடன் திருமணம்: நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த அதே வருடத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நடிகை நயன்தாரா. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். ஒரு பக்கம் சினிமா மற்றொரு பக்கம் பிசினஸ் என பிஸியாக இருக்கும் நயன்தாரா குழந்தைகளையும் மிக கவனமாக வளர்த்து வருகின்றார்.
விக்னேஷ் சிவன் படம்: இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனையடுத்து அஜித்தின் 62வது திரைப்படத்தின் இயக்குனர் இவர்தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில் கடைசியில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டார்.
அதனை தொடர்ந்து லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக பிரபலமான பிரதிப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரித்து வருகின்றார்.
தயாரிப்பாளருடன் பிரச்சனை: இப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த போதே விக்னேஷ் சிவனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடிக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்திருக்கின்றார்.
இதனால் தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த தயாரிப்பாளர் லலித் இனிமேல் படத்திற்காக எந்த தொகையும் செலவிட மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு தயாரிப்பாளரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி படத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
புலம்பும் லலித்: விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்ஐகே திரைப்படம் மீண்டும் தொடங்கி எடுக்கப்பட்டு வரும் நிலையில் நயன்தாராவை வைத்து தான் சமாதானம் பேசி இருக்கிறார்கள். அதாவது நடிகை நயன்தாரா கவின் உடன் அடுத்ததாக ஹாய் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தையும் தயாரிப்பாளர் லலித் தான் தயாரிக்க இருக்கின்றார்.
அதனால் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் சம்பளத்தை முன்பே கொடுத்துவிடுங்கள். அதை வைத்து எல்ஐகே படத்தை முடித்து விடுகின்றேன் என்று கூறியிருக்கின்றார். இதனால் சம்மதம் தெரிவித்த தயாரிப்பாளர் அந்த பணத்தை கொடுத்து படத்தை எடுத்து வருகின்றார். ஆனால் தற்போது கவின் நடிக்கவிருக்கும் ஹாய் திரைப்படத்திற்கு நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்க சென்றால் தொடர்ந்து அவர் இழுத்தடித்து வருகின்றாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றார் தயாரிப்பாளர் லலித்.