விஜயகாந்த் பட தயாரிப்பாளர் காலமானார்... திரையுலகம் அதிர்ச்சி!

By :  Sankaran
Update: 2025-02-01 11:11 GMT

தமிழ்த்திரை உலகில் கேப்டன் விஜயகாந்த் படங்கள் என்றாலே ஒரு மாஸ் தான். அன்னைக்கும் சரி. இன்னைக்கும் சரி. அவர் நடித்த படங்களைப் பார்த்தா அப்படி ஒரு புத்துணர்ச்சி வரும். பல அவமானங்களைப் பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்தவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர்.

பிரபலமான படம்: அவர்களுக்கு நஷ்டம்னு தெரிஞ்சா உடனடியாகத் தன் கையில் இருந்து பணத்தைக் கொடுத்து அவர்களின் துயர் துடைப்பார். அந்த வகையில் அவரது பிரபலமான படம் ஒன்றின் தயாரிப்பாளர் இன்று காலமானது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாங்க பார்க்கலாம்.

சின்னக்கவுண்டர்: ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர்ஹிட் படம் சின்னக்கவுண்டர். சுகன்யா, மனோரமா, செந்தில், கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் அத்தனையும் அருமை.


வி.நடராஜன்: இந்தப் படத்தில்தான் 'அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவரே' என்ற பிரபலமான பாடல் வரும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வி.நடராஜன் (வயது 70) இன்று காலமானார். இது திரை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தமபுருஷன்: இவர் பிரபுவின் உத்தமபுருஷன், சத்யராஜின் பங்காளி ஆகிய படங்களையும் தயாரித்து சூப்பர்ஹிட் கொடுத்துள்ளார். ஜெயலலிதா நடித்த நதியைத் தேடி வந்த கடல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பு: கடந்த சில வருடங்களாக வயது முதிர்வின் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். அந்த வகையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் மாரடைப்பால் காலமாகி விட்டார். இவரது மனைவி ஜோதி, செந்தில், விக்கி என இரு மகன்கள் உள்ளனர்.  

Tags:    

Similar News