சூர்யா உயரத்தைப் பத்தி நான் கமெண்ட் அடிக்கல... மாணிக்கம் நாராயணன் சொல்ல வருவது இதுதான்!
சூர்யாவுக்கு சமீபத்தில் ரெட்ரோ படம் வந்து கலவையான விமர்சனங்களைக் கொடுத்தது. படம் எதிர்பார்த்த வசூல் இல்லன்னு ஒரு பக்கம் சொன்னாலும் படம் 104 கோடி வசூல் என்கிறது தயாரிப்பு தரப்பு. சக்சஸ் மீட்டும் நடத்தியாச்சு. அந்த வகையில் சூர்யா மற்றும் அவரது படங்கள் குறித்து பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
சூர்யா நம்பிக்கையை இழக்க மாட்டாரு. அவரு மகர ராசி. தன்னம்பிக்கை இருக்கும். அவருக்கு ஒரு படம் வரும். ஏதோ ஒரு டைரக்டர் காம்பினேஷன்ல வரும். அவருக்கு யாரு அட்வைஸ் பண்றாங்க அவரு எதைக் கேட்குறாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா நிச்சயமா அவருக்கு ஒரு வெற்றி வரும். நான் அட்வைஸ் பண்ற அளவுக்குப் பெரிய ஆளு இல்ல. ஆனா ஒரே ஒரு மேட்டரை மட்டும் சொல்லிடுறேன். மக்களுக்குத் தெரியணும் என்கிறார் மாணிக்கம் நாராயணன்.
நான் ஒரு தக்கா இருக்கணும். எனக்கு இந்த மாதிரிதான் படம் வேணும்னு ஹீரோ நினைக்கிறாங்க. சினிமாவுல காஸ்டிங்னு ஒண்ணு இருக்கு. கமல் சார் தான் வேட்டையாடு விளையாடுல ப்ரூஃப் பண்ணுவாரு. அதே மாதிரி இந்த ரோலுக்கு இவரை நடிக்க வச்சாத் தான் படம் ஓடும்னு டைரக்டருக்குத் தெரியணும்.
சூர்யா டேட் கொடுத்தாருங்கறதுக்காக என்ன வேணாலும் படம் பண்ணலாம்னா அது தப்பு. அதை சூர்யா தான் சமாளிக்கணும். அவருடைய லைஃப். தீதும் நன்றும் பிறர் தர வாரா. சூர்யாவுக்குன்னு ஒரு லவ்வர் பாய் இமேஜ் இருக்கு. அதை மீறி நான் தக்கா வாரேன். கேங்ஸ்டரா வாரேன்னு அப்படின்னு வர டிரை பண்றாரு. தனக்கு எந்தப் படம் சூட்டாகும்னு தெரியணும்.
எம்ஜிஆர் வந்து தன்னை விட உயரமான ஆளை நடிக்க விட மாட்டாரு. அந்த வகையில் சூர்யா அருமையான நடிகர். மக்கள் மத்தியில நல்ல பேரு இருக்கு. சிங்கம் பண்ணினாரு. அது ஓகே. ஒரு போலீஸ்காரன் நெட்டையாவும் இருக்கலாம் குட்டையாவும் இருக்கலாம். ஆனா ஒரு கேங்ஸ்டர் வந்து... அவரு உயரத்தைப் பத்தி நான் கமெண்ட் அடிக்கல. நான் அவருக்கு நன்மைன்னு நினைச்சிப் பேசுறேன். அது தீமையா இருக்குமான்னு தெரியல.
அவரோட ஃபிகர் எப்படி இருக்கு? அதுக்கு அந்த ரோல் சூட் ஆகுதான்னு அவருதான் டிசைடு பண்ணனும். மத்தவங்க டிசைடு பண்ண முடியாது. அந்தக் கதையில கரெக்டா ஃபிட் ஆனா எமோஷனல் ஆனா படம் ஓடும். இல்லன்னா இப்படித்தான் மிக்ஸ்டு விமர்சனம் வரும். அதை அவருதான் பார்த்து கரெக்ட் பண்ணிக்கணும். நம்ம அட்வைஸ் பண்ண முடியாது என்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.