வேட்டையன் விஜயதசமிக்கு வசூல் வேட்டையாடியதா?.. கோட்டை விட்டதா?.. புலம்பும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் வசூல் 3வது நாளிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தியேட்டர்களும் வேட்டையன் படத்துக்கு அதிகரித்து இருப்பதாக லைகா அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10-ஆம் தேதி வெளியான வேட்டையன் திரைப்படம் தொடர் விடுமுறை காரணமாக குடும்பங்களை தியேட்டருக்கு வரவைத்து வசூல் வேட்டை ஆடி வருகிறது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, துஷாரா விஜயின், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலன் நடித்த வேட்டையன் திரைப்படம் போலி என்கவுண்டர்களுக்கு எதிரான படமாகவும் ஆன்லைன் கல்வி மோசடியை தோலுரிக்கும் படமாகவும் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்த கோட் திரைப்படம் ஏகப்பட்ட படங்களின் காப்பி என விமர்சிக்கப்பட்ட நிலையில், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற கிளைமாக்ஸ் காட்சி எல்லாம் கிரிஞ்சு என அந்த படத்தை பலரும் விமர்சித்தனர்.
ஆனால், நடிகர் விஜய்யை தியேட்டரில் வந்து பார்க்க ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்த நிலையில் தமிழ்நாட்டிலேயே 100 கோடி ரூபாய் ஷேர் வசூல் செய்து உலக அளவில் 455 கோடி வசூலை கோட் திரைப்படம் பெற்றது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் 70 கோடி ரூபாய் அளவுக்கு உலக அளவில் வசூல் செய்தது. இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த வேட்டையன் திரைப்படம் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது நாளான விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சுமார் 40 கோடியளவுக்கு உலக அளவில் வசூல் செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இதுவரை வேட்டையின் திரைப்படம் 160 கோடி ரூபாய் வசூலை உலக அளவில் ஈட்டி இருப்பதாக கூறுகின்றனர். வேட்டையன் படத்தின் பட்ஜெட் 160 கோடி ரூபாய் என்பதால் படம் 3 நாட்களிலேயே போட்ட பணத்தை எடுத்துள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் 30 முதல் 40 கோடி ரூபாய் வசூல் செய்து 200 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்றும் தீபாவளி வரை படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து அதிகப்படியாக 400 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
கோட் படம் அளவுக்கு வேட்டையன் வசூல் செய்யவில்லையே என்றும் அடுத்து வரும் கூலி படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி அடிக்கும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டுப்போட மாட்டோம் என புலம்பி வருகின்றனர்.