மனைவியின் 40 லட்ச ஜீவனாம்சம்... நக்கல் கமெண்ட் போட்ட ரவி மோகன்... இப்படி குழப்புறாரே!
Ravi Mohan: தமிழ் சினிமாவில் ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து பிரச்னை தான் எறிந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ரவி மோகனின் இன்ஸ்டா பதிவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் சிரித்து கொண்டு இருக்கின்றனர்.
ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த பின்னர் அவரை சுற்றி பல விஷயங்கள் யூகங்களாக பரவி வந்த நிலையில் சமீபத்தில் நிறைய விஷயங்களுக்கு உருக்கமாக விளக்கம் கொடுத்து இருந்தார்.
தன்னை மனைவி குடும்பத்தார் தங்க முட்டை போடும் வாத்து போல வைத்திருந்ததாகவும், என்னை அவர்கள் நோகடித்ததாகவும் அவர் தரப்பு நியாயங்களை பட்டியல் போட்டு சொல்லி இருந்தார். அதுமட்டுமல்லாமல் நான் மனைவியை தான் பிரிந்தேன். என்னுடைய மகன்களை அல்ல என்றும் தெரிவித்து இருந்தார்.
இதற்கு ஆர்த்தி மற்றும் அவர் தாய் பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். இதில் ஆர்த்தி தங்கள் வாழ்க்கை நன்றாக தான் இருந்தது. மூன்றாவது மனிதரால் தான் நாங்கள் இந்த நிலைக்கு வந்து இருக்கிறோம் எனவும் சரமாரியாக கணவர் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
எனக்கு காசே தேவையில்லை. என் கணவர் கண்ணியத்துடன் பிரிந்து இருக்கலாம். என்னை கேவலப்படுத்தி விட்டார். நான் சுயநலவாதி என பல குற்றச்சாட்டை வைத்து பொதுவில் என்னை அசிங்கப்படுத்தியதாக ஆர்த்தி ரவி நேற்று பொங்கிய அறிக்கை வெளியானது.
இன்று நடந்த விவாகரத்து வழக்கு விசாரணையில் ரவி மோகனிடம் ஜீவனாம்சமாக 40 லட்சம், இரு மைனர் குழந்தைகளையும் ரவிமோகனே பராமரிக்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் கோரிக்கை வைத்து இருக்கிறார். இது பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காசு பிடிங்குறார் என ரவி சொன்னது உண்மையோ எனக் கேள்விகளும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போன் பேசும் போட்டோவை போட்ட ரவி மோகன் நியூஸ் இன்கம்மிங் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டு இருக்கிறார். இதில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் அதற்கு உனக்கு நக்கல்னா என கமெண்ட் போட்டு வருகின்றனர். ஒருவேளை பதில் அறிக்கைக்கு சொல்கிறாரா இல்லை தன்னுடைய பதில் மனுவிற்கான பதிலடியாக சொல்கிறாரா என்பது குறித்து விளக்கம் இல்லை. பொறுத்திருந்து பார்க்க தான் வேண்டும்.