பெற்றோரைக்கூட சந்திக்க முடியல... வாழ முடியாத வாழ்க்கை...! ரவி மோகன் உருக்கமான தகவல்
ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ரவி மோகனான ஜெயம் ரவி தற்போது கெனிஷா என்ற பாடகியுடன் சுற்றி வருவதாகவும் அவளையே 2வதாக திருமணம் செய்யப்போவதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. சமீபத்தில் கூட ஐசரிகணேஷின் இல்லத் திருமணவிழாவுக்கு இவர்கள் ஜோடியாக வந்து பரபரப்பூட்டினர்.
இந்நிலையில் ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் கேட்டு இருந்தார். என் பிள்ளைகளின் வாழ்க்கைக் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு அவர் என்ன பதில் சொல்வார்? சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்றெல்லாம் கேள்வியை எழுப்பி இருந்தார் ஆர்த்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரவிமோகன் இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி உள்ளார். என்னன்னு பாருங்க.
.மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளதாகவும், மகன்களை அல்ல என்றும் ரவி மோகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என் வாழ்க்கையின் அழகான துணை கெனிஷா என்றும் ரவிமோகன் தெரிவித்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் வாழ்க்கையை வீழ்த்தன்மை மற்றும் கடின உழைப்பின் மூலம் கட்டி எழுப்பியுள்ளேன். கடந்த கால திருமண பந்தங்களில் உள்ள எவரும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ கடன் வாங்கிய புகழுக்காகவோ மலிவான அனுதாபத்தை கையாள அனுமதிக்க மாட்டேன் என்றும் ரவிமோகன் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக உடல், மனம், உணர்ச்சி மற்றும் கடுமையான நிதி துஷ்பிரயோகங்களில் தப்பியுள்ளேன். தற்போது இத்தனை ஆண்டுகளாக சொந்த பெற்றோரைக் கூட சந்திப்பதற்கு இடமில்லாமல் தனிமையில் கஷ்டப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தன் திருமணமே கேள்விக்குறி. என் திருமணத்தைக் குணப்படுத்தவும், காப்பாற்றவும் உண்மையான முயற்சியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தாங்க முடியாத யதார்த்தத்தில் சிக்கி உள்ளதாகவும், வாழ முடியாத ஒரு வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்ல வலிமையான முடிவைத் தேர்ந்தெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ரவி மோகன்.