திரிஷாவுடன் நான்!.. வெளியே வரும் புகைப்படங்கள்!.. விஜய் சொல்ல வருவது என்ன?..
Vijay Trisha: தமிழ் சினிமாவின் இளவரசனாக இருப்பவர் விஜய். கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் இவர். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அரசியலுக்கு போவதாக அறிவித்துவிட்டதால் இது விஜயின் கடைசிப்படம் என அவரே சொல்லிவிட்டார். அதோடு, அரசியலிலும் நுழைந்து அதிரடி காட்டி வருகிறார்.
இந்நிலையில்தான், நடிகை திரிஷாவுடன் இணைந்து விஜயை பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. இருவரும் முதலில் கில்லி படத்தில்தான் இணைந்து நடித்தனர். அப்படி பார்த்தல் விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே கடந்த 20 வருடங்களாக பழக்கம் இருக்கிறது.
கில்லி படத்திற்கு பின் ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ ஆகிய படங்களில் விஜயுடன் ஜோடி போட்டு நடித்தார் திரிஷா. லியோ படத்தில் விஜய்க்கு லிப்-லாக் முத்தமும் கொடுத்து ரசிகர்களை சூடேற்றினார். கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார். ஒருபக்கம், விஜயும், திரிஷாவும் ஒன்றாகவே சுற்றும் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு.
ஒருபக்கம், நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே தனது மனைவி மற்றும், பிள்ளைகளுடன் இல்லை. அவர்கள் லண்டனில் வசிக்க விஜயோ சென்னை நீலாங்கரையில் தனியாகவே வசித்து வருகிறார். அவரின் மனைவி சங்கீதா விஜயை விட்டு பிரிந்து வாழ்வதற்கு பின்னணியில் முக்கிய காரணமாக திரிஷாவை சிலர் சொல்கிறார்கள்.
லியோ படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது வெளிநாட்டில் விஜயும், திரிஷாவும் ஒன்றாக சுற்றும் புகைப்படம் வெளியானது. விஜயுடன் ஒரு லிப்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தார் திரிஷா. விஜய் நினைத்திருந்தால் அந்த போட்டோவை பகிர வேண்டாம் என திரிஷாவுக்கு சொல்லி இருக்க முடியும். ஆனால், அவர் சொல்லவில்லை.
அதேபோல், 2 நாட்களுக்கு முன் விஜயும், திரிஷாவும் தனி விமானத்தில் ஒன்றாக போன புகைப்படமும், வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதையெல்லாம் விஜய் கண்டிப்பாக பார்த்திருப்பார். கேட்டால் ‘ஒரு விஷயத்தை பற்றி மற்றவர்கள் பேசும்போது நாம் ரியாக்ட் செய்தால் அது உண்மையாக மாறிவிடும்’ என தத்துவம் சொல்வார்.
திரிஷாவுடன் தான் இருக்கும் புகைப்படம் வெளியாவது பற்றி விஜய் அமைதியாக இருக்கிறார் எனில் தன்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி ரசிகர்களும், மற்றவர்களும் தெரிந்துகொள்ளட்டும் என அவர் விரும்புவதாக இதை புரிந்துகொள்ள முடிகிறது. ‘எவ்வளவு நாள்தான் இதை மூடி வைக்க முடியும்?.. விரைவில் விஜயே இது பற்றி பேசுவார்’ என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.