விஜய் பற்றி கேள்வி கேட்டா கிரேட் எஸ்கேப் ஆகும் நடிகர்.. இன்னுமா இந்த உலகம் இவரை நம்புது?
ரோஜாவனத்தில் என்ட்ரி ஆன நடிகர் ஜெய் ஆகாஷ். இவர் திரும்பவும் இனிது இனிது காதல் இனிது படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இப்போது விஜய் பெயரைச் சொன்னதும் ரொம்பவே குழம்பிப் போனார். வாங்க என்னதான் நடந்ததுன்னு பார்ப்போம்.
என்னை பாலசந்தர் தான் அறிமுகப்படுத்தினார். கவிதாலயா மூலமா தான் என்ட்ரி ஆனேன். என்னோட முதல் படம் ரோஜா வனம். தெலுங்குல நிறைய படம் பண்ணினேன். ஆனந்தம் படம் தெலுங்குல நடிச்சேன்.
அதுக்குப் பிறகு அமுதே, ராமகிருஷ்ணா, காற்றுள்ளவரை, குருதேவா, கிச்சா வயசு 16 போன்ற படங்களில் நடித்தேன். ஆனால் தமிழில் எதிர்பார்த்த சக்சஸ் கிடைக்கல. தெலுங்கு பக்கம் போனேன் என்கிறார் ஜெய் ஆகாஷ். காதல் கோட்டை பண்ணின டீம் ராமகிருஷ்ணா பண்ணினாங்க. ஆனா சக்சஸ் ஆகல.
அப்புறம் அமுதே, துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன்வாசம் பண்ணினேன். ஜீ தமிழில் நீதானே என் பொன்வசந்தம் எனக்கு நல்ல பேரைக் கொடுத்தது. நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலும் பண்ணினேன். நல்லா தான் போய்க்கிட்டு இருக்கு என்கிறார் ஜெய் ஆகாஷ்.
இவர் இலங்கையிலும் தன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காக இன்டோ ஸ்ரீலங்கன் புராஜெக்ட் ஆரம்பித்துள்ளார். அதன் சார்பாக முதல் படமாக என் உயிரே என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் ஆடியோ லாஞ்சில் பேசும்போது தெலுங்குல 36 படங்கள் பண்ணினேன். 15 படம் சூப்பர்ஹிட்.
தெலுங்குல நான் பண்ணின முதல் படம் ஆனந்தம் சூப்பர்ஹிட். தமிழ்ல நான் பண்ணின அதே ஆனந்தம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றும் சொல்கிறார் ஜெய் ஆகாஷ். இவரிடம் விஜயைப் பற்றி ஒரு கேள்வி கேட்டதற்கு அரசியலில் நான் தலையிட மாட்டேன். என்னுடைய ஃபோகஸ் ஃபுல்லா சினிமா தான் என்று மழுப்பலாகப் பதில் சொல்லி தப்பித்து விட்டார் ஜெய் ஆகாஷ்.
தமிழில் முன்னணி நடிகர் ஒருவரின் மனைவியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாராம் ஜெய் ஆகாஷ். அதனால்தான் தெலுங்கு, கன்னடம் படங்களில் ஜெய் ஆகாஷ் கவனம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.