காமெடியன் டூ ஹீரோ… சூரி vs சந்தானம்… இவர்கள் பயணத்தின் மிஸ் பண்ணக்கூடாத தகவல்கள்..

By :  AKHILAN
Update: 2025-05-19 15:30 GMT

Soori vs Santhanam: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களாக இருந்த இருவருமே தற்போது ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் இவர்களுடைய கேரியர் பயணத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த தொகுப்புகள் இது.

சந்தானம் முதலில் சின்னத்திரையில் ஹிட் கொடுத்தவர். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் நடிகராக அறிமுகமானார். பிரபல படங்களை நக்கலடித்து ஸ்பூவ் கதை உருவாக்க அவருக்கென ஒரு கூட்டம் இருந்தது. 

 

அதே சமயம் சூரி சன் டிவியின் பிரபல தொடரான திருமதி செல்வத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். பின்னர் தமிழ் படங்களில் சின்ன சின்ன வேலைகளில் தொடங்கினார். வின்னர், ஜீ, தீபாவளி உள்ளிட்ட படங்களில் சின்ன வேடங்களிலும் நடித்திருந்தார்.

2002ம் ஆண்டே தன்னுடைய நண்பர் சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமான சந்தானம் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி தனக்கான இடத்தினை உருவாக்கி வந்தார். 2008ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழுவில் ஒரே காமெடியால் புகழ் பெற்றார் சூரி.

ஆனால் சந்தானத்தின் பெரிய வெற்றி என்றால் 2009ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி திரைப்பட காமெடிகள் தான். அதே சமயம் சூரிக்கு தொடர் வெற்றி படங்கள் அமைந்தது. மனம் கொத்தி பறவை, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என வரிசையாக ஹிட் படமாக நடித்தார். மாடர்ன் காமெடிகளில் சந்தானமும், கிராமத்து காமெடிகளில் சூரியும் கலக்கி வந்தனர்.

அந்த சமயத்தில் சந்தானம் 2013 ஆண்டு தானே தயாரித்து ஹீரோவாக நடித்த படம் தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா. மிகப்பெரிய வெற்றி கொடுத்த படத்தால் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்தார். அதிலும் அவர் நடிப்பில் தில்லுக்கு துட்டு வசூல் வேட்டை நடத்தியது. இதனாலே இன்றளவும் டிடி படத்தின் அடுத்தடுத்த பாகங்களை மிஸ் பண்ணாமல் எடுக்கிறார் சந்தானம். ஆனால் சூரிக்கு ஹீரோ ஆசையே இல்லை. 

 

விடுதலை கதையில் சூரி தான் ஹீரோ என அவர் உறுதியாக இருக்கவே இந்த பாதைக்கு வந்திருக்கிறார். இன்றளவும் தனக்கான படங்களில் நடிக்காமல் கதைக்காக நடித்து ஆச்சரியப்படுத்துவதில் சூரி கில்லாடி தான். அவரின் மாமன் படம் சமீபத்திய எடுத்துக்காட்டாகி இருக்கிறது. இருவரையுமே காமெடி உலகம் மிஸ் பண்ணவது தான் உண்மை.

Tags:    

Similar News