என்னோட பையன்தான் எனக்கு இன்புட்... விலாவரியா சொல்லிட்டாரே சந்தானம்...!

By :  SANKARAN
Published On 2025-05-14 17:03 IST   |   Updated On 2025-05-14 17:03:00 IST

தமிழ்த்திரை தற்போது ஏற்பட்டுள்ள காமெடி பஞ்சத்திற்கு சரியான தீனியைப் போடுபவர் நடிகர் சந்தானம்தான் என்றால் மிகையில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் அவர் விஷாலுடன் இணைந்து நடித்த மதகஜராஜா வெளியாகி சக்கை போடு போட்டது. சுந்தர்.சி.யின் இயக்கத்தில் சில பொருளாதார சிக்கல்களால் 12 நாள்களாக பெட்டிக்குள் முடங்கிக்கிடந்த படம் மீண்டும் எழுந்து வந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

அந்தப் படத்தின் வெற்றி சந்தானத்தை மீண்டும் ஹீரோவில் இருந்து காமெடிக்குக் கொண்டு வர வைத்துவிட்டது. சிம்புவின் 49வது படத்தில் அவருடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை மறுநாள் (16ம் தேதி) வெளியாகிறது.

இதனால் பல மீடியாக்களுக்கு புரொமோஷன் கொடுக்கும் வகையில் பேட்டி அளித்து வருகிறார்.  டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் வரும் கோவிந்தா கோவிந்தா பாடல் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கும் ஒரு பதில் கெத்தா சொல்லிருக்காரு சந்தானம். என்னன்னு பாருங்க. நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொல்வாங்க.

பாக்குறவங்க அவங்க அவங்க கருத்துகளைச் சொல்வாங்க. அது எல்லாத்தையும் நாம எடுத்துக்கிட்டு வாழ முடியாது. போறவங்க வர்றவங்க சொல்றதை எல்லாம் கேட்க முடியாது. கோர்ட், சென்சார் சொல்றதை மட்டும் கேட்டா போதும். அதைத்தான் சினிமாவில் பண்ண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


அந்த வகையில் தனது மகன் குறித்தும் ஒரு சில கருத்துகளை முன்வைத்துப் பேசியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

பசங்க எல்லாமே இப்போ வளர்ந்துட்டாங்க. அதுவும் நல்ல விஷயம்தான். ஏனென்றால் அவங்க கிட்ட இருந்து நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கிறது. என்னுடைய பையன் இப்ப பிளஸ் டூ படிச்சிக்கிட்டு இருக்காரு. அடுத்தது காலேஜ் முடிச்சு டைரக்ஷன் பண்ணனும்னு சொல்றாரு. இவங்க எல்லாம் வீட்டிலேயே கிரிஞ்ச்சா இருக்கு, பூமர் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. அதுவே நமக்கு இப்ப ஒரு அப்டேட் தான் என்கிறார் நடிகர் சந்தானம். 

Tags:    

Similar News