அப்பா நிறைய பேர தூக்கிவிட்டார்!.. எனக்கு தேவையில்லை!. சண்முக பாண்டியன் தடாலடி!...
Shanmuga Pandiyan: தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை வைத்திருந்தவர் விஜயகாந்த். குறிப்பாக கிராமத்து பக்கம் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர். சில சமயம் ரஜினி, கமல் படங்களை விடவும் விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலை அள்ளிய சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. தமிழ் திரையுலகில் பக்கா ஆக்சன் ஹீரோவாக இருந்தார் விஜயகாந்த். குறிப்பாக போலீஸ் அதிகாரி வேடத்தில் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போலவே சினிமாவில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்தார். தனது மகனை சகாப்தம் என்கிற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் விஜயகாந்த். அதன்பின் மதுர வீரன் என்கிற படத்திலும் சண்முக பண்டியன் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை.
அதன்பின் தமிழன் என்று சொல் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. இதில், விஜயகாந்தும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த படம் டிராப் ஆனது. அதுதான் விஜயகாந்த் கலந்துகொண்ட கடைசி படப்பிடிப்பு.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அப்பாவை கவனித்துக்கொண்டிருந்ததால் சினிமாவில் கவனம் செலுத்தாத சண்முக பாண்டியன் இப்போது மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார். படைத்தலைவன் என்கிற படம் உருவாகி ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது. விஜயகாந்த் இறந்தபோது சண்முக பாண்டியன் படத்தில் நடிப்பேன் என விஷால் மற்றும் ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை செய்யவில்லை.
ஏற்கனவே விஜயை செந்தூரபாண்டி படத்தில் தூக்கிவிட்ட விஜயகாந்துக்காக அவரின் மகன் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என பலரும் சொன்னார்கள். ஆனால், கடைசி வரை விஜய் அதை செய்யவே இல்லை. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சண்முக பாண்டியன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அப்பாவுடைய சத்ரியன், ரமணா திரைப்படங்களை நான் எடுத்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. அப்பா உதவி செய்த பலரும் எனக்கு உதவ வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் எனக்கு அப்படி உதவி தேவைப்படும்போது கண்டிப்பாக அவர்களிடம் கேட்பேன்’ என சொல்லியிருக்கிறார்.