மிஸ்ஸான பிரித்விராஜ்… ப்ளாப்பான ஜூனியர் என்.டி.ஆர் படம்… நடிகர் சிபிராஜின் பின் இத்தனை ரகசியங்களா?
Sibiraj: தமிழ் சினிமாவில் புரட்சி தமிழன் என ரசிகர்களால் அழைக்கப்படும் சத்யராஜ் நடிப்பில் கில்லாடி. அவரின் மகன் என்ற அடையாளத்துடன் அறிமுகம் ஆனாலும் புலிக்கு பிறந்தது பூனையாகாது என்ற ரீதியில் நடிப்பில் மிரட்டுபவர் சிபிராஜ். அவர் குறித்து இதுவரை பலரும் அறியாத தகவல்கள் அடங்கிய தொகுப்புகள்.
முதன்முதலில் சிபிராஜை ஹீரோவாக முடிவெடுத்த பின்னர் நிறைய பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பேரில் 2003ம் ஆண்டு மலையாளத்தில் ஹிட்டடித்த பிரித்விராஜின் நந்தனம் படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சிபிராஜ் அறிமுகமாக இருந்தார்.
மலையாளத்தை இயக்கிய ரஞ்சித் தான் தமிழிலும் இயக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போனது. அதை தொடர்ந்தே சிபிராஜ் தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர். நடிப்பில் ராஜமெளலி இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தார்.
முதல் படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த படம் தமிழில் படு தோல்வி அடைந்தது. மகனுக்கு முதல் படமே தோல்வியில் முடிய அவரின் கேரியரின் கிராபை அதிகரிக்க அவருடன் அடுத்த நான்கு படங்களில் இணைந்து நடித்தார்.
ஜோர் முதல் படமாக வெளிவந்தது. சுமார் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் மற்றும் கோவை ப்ரதர்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளிவந்தது. ஆனால் முதல் படத்தில் இருந்த வரவேற்பு கூட அடுத்தடுத்த படங்களுக்கு இல்லை. ஆனால் இப்படங்கள் பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது நல்ல வரவேற்பை பெற்றது.
சத்யராஜ் கூட நடிப்பது ஒத்து வராமல் போக லீ என்ற படத்தினை தயாரித்தார். அதுவும் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியானது. இதையடுத்து மூன்று ஆண்டுகள் நடிக்காமலே இருந்தார்.
தொடர்ந்து தந்தை ரூட்டில் வில்லன் அவதாரம் எடுத்தார். பிரசன்னா நடிப்பில் வெளியான நாணயம் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்தார். இருந்தும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் போனது. இதனால் சிபிராஜ் நடிப்பில் இருந்தே நான்கு ஆண்டுகள் பிரேக் விட்டு அமெரிக்காவிற்கு நடிப்பு பயிற்சிக்கு சென்றார்.
அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து 2014ம் ஆண்டு நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நடித்தார். அந்த படமே சிபிராஜுக்கு முதல் வெற்றியாக அமைந்தது. இந்த படத்தினை ஓகே செய்ய மட்டுமே 200 கதைகளை கேட்டு பின்னரே இதை ஓகே செய்தாராம்.
அதை தொடர்ந்து தனது அப்பாவுடன் இணைந்து நடித்த ஜாக்சன் துரை படமும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அடுத்த படமான கட்டப்பாவை காணோம் தோல்வியாக அமைய மீண்டும் சத்யராஜ் தயாரிப்பில் பிரதீப் இயக்கத்தில் நடித்த படம் சத்யா. இந்த படமும் நல்ல வெற்றியை கொடுத்தது.
ஆனால் அமெரிக்கா பயிற்சிக்கு பின்னர் கதைகளில் பெரிய கவனம் செலுத்தி வருகிறார் சிபிராஜ். வசூல் ரீதியாக சிக்கலாக அமைந்தாலும் கதை ரீதியாக வெற்றியாக அமைந்து வருகிறது. அடுத்தடுத்து அவர் நடிப்பில் "ரேஞ்சர்" மற்றும் "ஜாக்சன் துரை 2" ஆகிய படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.