இது எதுக்குடா வம்பு? ED ரெய்டால் முடிவை மாற்றிக் கொண்ட சிம்பு.. ஓடுறா கைப்புள்ள
simbu49
தற்போது சிம்பு தக் லைஃப் படத்தின் புரோமோஷனில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஜூன் 5 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படம் ரிலீஸாக இருக்கின்றது. படத்தை பற்றி பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் மணிரத்னமும் கமலும் மீண்டும் இணைந்துள்ளனர்.
அதனால் நாயகன் எஃபெக்ட் இந்தப் படத்தில் இருக்குமா என்றும் கேட்டு வருகின்றனர். ஆனால் நாயகன் படம் வேறு. தக் லைஃப் படம் வேறு என கமல் எல்லா பேட்டிகளிலும் கூறி வருகிறார். சக்திவேல் நாயக்கர் என்ற பெயரை மட்டும்தான் நாயகன் படத்தில் இருந்து பயன்படுத்தியிருக்கிறோம் என்றும் கூறினார். மேலும் சிம்புவுக்கு இந்தப் படத்தில் மிக மிக முக்கியமான கதாபாத்திரம் என்பது டிரெய்லரில் இருந்தே நமக்கு தெரிகிறது.
கமலுக்கு இணையான கேரக்டர் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக அவருடைய 49வது படத்தில் நடிக்க இருக்கிறார். அது சம்பந்தமான பூஜையும் சமீபத்தில் தான் நடந்தது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். கூடவே சந்தானமும் இந்தப் படத்தில் நடிக்கிறார். சிம்புவின் 49வது படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரிக்கிறார்.
ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் அலுவலகத்தில் தற்போது ரெய்டு நடந்து வருகிறது. அந்த ரெய்டில் ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாகவும் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன் , சிம்பு, தனுஷ் இவர்களுக்கு அட்வான்ஸ் தொகையாக பல கோடி ரூபாய் ஆகாஷ் கொடுத்ததாகவும் அதனால் ED ரெய்டு வளையத்தில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் சிக்குவார்கள் என்றும் சொல்லப்பட்டது.
simbu49
ஆனால் இவர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு அதில் இருந்து விடுபட்டிருக்கின்றனர் என தற்போது வலைப்பேச்சில் கூறியிருக்கிறார்கள். இன்னொரு விஷயம் சிம்பு 49 படத்தை தற்போது வேறொரு தயாரிப்பாளரை வைத்து பண்ணலாமா என்று சிம்பு யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக சிம்பு எந்தவொரு அட்வான்ஸும் வாங்கவில்லையாம். அதனால் இந்த ரெய்டு பிரச்சினை எல்லாம் வேண்டாம் என வேறொரு தயாரிப்பாளரை சிம்பு அணுக இருப்பதாக சொல்லப்படுகிறது.