சிம்பு ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல.. டபுள் ட்ரீட்! இனிமே யாராவது கேட்பீங்க
simbu
படம் வரலைனாலும் பரவாயில்லை. உன்னுடைய போஸ்டரை பார்த்தே நாங்கள் ஹேப்பியாக இருப்போம் என சொல்கிற ஒரே ரசிகர்கள் சிம்புவின் ரசிகர்கள் தான். அவர் நடிப்பில் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகின்றது. இருந்தாலும் அவரை இன்னும் லைம் லைட்டில் வைத்திருப்பது அவருடைய ரசிகர்கள் தான். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் சிம்புவின் புகைப்படத்தை பார்த்து அதை பெரிய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.
அதற்கு ஏற்ப சிம்புவும் எந்த ஒரு மேடை ஏறினாலும் தவறாது அவருடைய ரசிகர்களைப் பற்றி புகழ்ந்து பேசாமல் வந்ததே கிடையாது. உங்களால்தான் நான் இங்கு நிற்கிறேன் என இந்த வார்த்தையை எப்பொழுதும் அவர் மறந்ததே கிடையாது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக மாறி இருக்கிறார் என்றால் சினிமா மீதும் நடிப்பின் மீதும் அவருக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம்.
10 தல படத்திற்கு பிறகு அவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படம் தக் லைஃப். வரும் ஜூன் 5ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து வைத்தார் போல் அமைந்தது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு வருடமாக படங்களே இல்லாமல் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த வருடம் டபுளாக கொடுக்க இருக்கிறார் சிம்பு .
simbu
ஜுன் ஐந்தாம் தேதி தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் அவர் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவருடைய 49 ஆவது திரைப்படம். அந்த திரைப்படத்தையும் இந்த வருடம் கிறிஸ்துமஸ் அன்றே ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருக்கிறார்களாம். அதற்காக படக்குழு தீவிரமாக படப்பிடிப்பை நடத்தப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இனிமேல் சிம்புவின் படம் எப்போது எப்போது என கேட்பீங்க? இதோ இந்த வருடம் டபுள் ட்ரீட் என அவருடைய இந்த அப்டேட் நமக்கு பதில் அளித்து இருக்கிறது.