துப்பாக்கி கொடுத்தவருக்கே அல்வா!.. இயக்குனரை மாற்றிய எஸ்.கே!.. ஐயோ பாவம்!..
சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். இயக்குனர் உண்மையிலேயே மிகவும் திறமையானவர், அவர் படத்தில் நடித்தால் நாம் பேசப்படுவோம் என ஒரு நடிகர் நினைத்தால் அந்த இயக்குனரை அவரே தொடர்புகொண்டு ‘சார் உங்க படத்தில் நான் நடிக்கணும்னு ஆசைப்படுகிறேன்’ என பிட்டை போடுவார். வெற்றிமாறன் எல்லாம் அந்த கேட்டகிரியில் வரும் இயக்குனர்தான். அவரை போல சில முக்கிய இயக்குனர்கள் இருக்கிறார்கள். மணிரத்னம் பல வருடங்கள் அதில் முதலிடத்தில் இருக்கிறார்.
சினிமா என்பதே வியாபாரம்தான். தொடர் ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கவே பெரிய நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அதுவே பெரிய நடிகரை வைத்து ஒரு தோல்விப்படத்தையோ அல்லது சுமாரான படத்தையோ கொடுத்த ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க நடிகர்கள் தயங்குவார்கள். வெங்கட்பிரபு இப்போது இதில்தான் சிக்கியிருக்கிறார்.
மங்காத்தாவுக்கு பின் இவரின் இயக்கத்தில் அஜித் நடிக்கவில்லை. எனவே, பல வருடங்களாக விஜயை வைத்து படமெடுக்க முயற்சி செய்தார். ஆனால், நடக்கவில்லை. ஒருவழியாக வெங்கட்பிரபு சொன்ன கதையில் நடிக்க சம்மதம் சொன்னார் விஜய். அப்படி உருவான கோட் படம் மெகா ஹிட் அடிக்கவில்லை. அதோடு, கலவையான விமர்சனங்களையும் பெற்றது.
அடுத்த விஜயாக ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், கோட் பட ரிசல்ட்டுக்கு பின் அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. பல மாதங்கள் அவரை ஃபாலோ செய்து சம்மதிக்க வைத்தார் வெங்கட்பிரபு. இன்னும் 2 மாதங்களில் ஷூட்டிங் துவங்குவதாக இருந்தது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
இந்நிலையில், இது நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏனெனில், வெங்கட்பிரபு சொன்ன கதை தான் ஏற்கனவே நடித்த டாக்டர் படத்தின் கதை போலவே இருப்பதால் அதை மாற்ற சொல்கிறார் எஸ்.கே. ஆனால், அதை மாற்றினால் கதையின் ஆன்மாவே மாறிவிடும் என ஃபீல் செய்கிறாராம் வெங்கட்பிரபு.
ஒருபக்கம், ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் எஸ்.கே. நடிக்க ஒரு படம் பேசப்பட்டது. இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம் எஸ்.கே. ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் சிவா அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கியவர் என்பதால் இந்த பிராஜெக்ட் டேக் ஆப் ஆக அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, இனிமேல் சிவகார்த்திகேயனை நம்பி பலனில்லை என மற்ற ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டு வருகிறாராம் வெங்கட்பிரபு.
விஜயை வைத்து படமெடுத்தும் வெங்கட்பிரபு நிலைமை இப்படி ஆகிப்போச்சே!...