கேரளாவில் ஸ்டிரைக்!.. சிக்கலில் கமல், அஜித், தனுஷ், சூர்யா படங்கள்!. ஒரு முடிவுக்கு வாங்கப்பா!..

By :  Murugan
Update:2025-02-20 21:40 IST

Kerala cinema: திரைப்படங்களுக்கு எந்த வகையிலெல்லாம் பிரச்சனை வரும் என சொல்லவே முடியாது. பெரும்பாலும் ஃபைனான்சியரிடம் வாங்கிய பணத்தை தயாரிப்பாளர் திருப்பி கொடுக்கவில்லை எனில் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டார்கள். ரிலீஸ் நேரத்தில் பல தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனை இதுதான்.

சிவகார்த்திகேயன் தயாரித்த சில படங்கள் தோல்வி அடைய பல கோடி கடனாளி ஆனார். எனவே, அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும் பணம் கொடுத்தவர்கள் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டார்கள். எனவே, சம்பளத்தை விட்டு கொடுத்தோ, அல்லது ஒரு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுக்கிறேன் என சொல்லியோ படத்தை ரிலீஸ் செய்து வந்தார்.


சில சமயம் திரைத்துறையில் நடக்கும் ஸ்டிரைக் காரணமாகவும் படங்களின் ரிலீஸ் பாதிக்கும். தற்போது அந்த சூழ்நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முறை ஸ்டிரைக் நடைபெறப்போவது கோலிவுட்டில் இல்லை. கேரளாவின் மல்லுவுட்டில் இதனால் தமிழ் சினிமாவின் வியாபாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதாவது, மலையாள சினிமா நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என சொல்லி தயாரிப்பாளர்கள் செய்யும் போராட்டம் இது. ஜூன் மாத துவக்கத்தில் இந்த ஸ்டிரைக் நடைபெறவுள்ளது. தமிழ் படங்கள் கேரளாவிலும் வெளியாகி வருகிறது. அதில், தயாரிப்பாளர்களுக்கு கணிசமான லாபத்தையும் கொடுக்கிறது.


அஜித்தின் குட் பேட் அக்லியும், தனுஷுன் இட்லி கடை படமும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என சொல்கிறர்கள். சிலரை ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதேபோல், கமலின் தக் லைப் படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. கேரளாவில் ஸ்டிரைக் என்றால் தக் லைப் அங்கே வெளியாகாது. எனவே, ரிலீஸை தள்ளி வைப்பார்களா இல்லை கேரளாவை விட்டுவிட்டு மற்ற மாநிலங்களில் படத்தை ரிலீஸ் செய்வார்களா என தெரியவில்லை.

மேலும், சில படங்களும் மே மாதத்தின் கடைசி வாரத்திலும், ஜுன் மாதம் முதல் மற்றும் இரண்டாம் வாரத்திலும் வெளியாகவுள்ளது. எனவே, இந்த எல்லா படங்களுத்தின் வசூலும் கேரளாவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஸ்டிரைக் துவங்குவதற்கு முன்னால் பிரச்சனை பற்றி பேசி சுமூக முடிவை எடுத்தால் நல்லது என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

Similar News