டிராகன் படம் இந்த அளவு ரீச்சாக இவங்கதான் காரணமா? இப்பதானே தெரியுது..!
தற்போது திரையரங்குகளில் கடந்த 3 வாரங்களாக சக்கை போடு போட்டு ஓடிக்கொண்டு இருக்கும் படம் டிராகன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய ரீச்சாகக் காரணம் திரைக்கதை. காட்சிக்குக் காட்சி படத்தை அவ்வளவு ரசனையாக எடுத்திருப்பார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பம்சமும் உள்ளது. அது என்னன்னா படத்தில் டிராகனின் பெற்றோர். ஜார்ஜ் மரியானும், இந்துமதியும் படத்தின் இருபெரும் தூண்களாக நடித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரின் அதாவது சராசரி பெற்றோர் எப்படி நடித்து இருப்பார்களோ அதை எந்தவித மிகையான நடிப்பும் இல்லாமல் யதார்த்தமாக நடித்துள்ளனர். பையன் வேலைக்காக 10 லட்சம் கேட்கும்போது நிலபுலன்களை விற்றுக் கொடுக்கிறார். அவனது நல்வாழ்வுதான் முக்கியம் என்கிறார் அப்பா ஜார்ஜ் மரியான்.
பொதுவாக பிள்ளைகளுக்கும், அப்பாக்களுக்கும் எப்பவுமே ஒரு இடைவெளி இருக்கும். ஆண்பிள்ளைகள் என்றால் அம்மாக்களிடம்தான் நெருக்கமாக இருப்பார்கள். அதே சமயம் பணம் மற்றும் பொருள் கேட்பது என்றால் அப்பாவிடம் தான் கேட்பார்கள். அதனால் அப்பாவும் தன்னால் முடிந்தளவு பிள்ளைகளின் நலன்தான் முக்கியம் என்று எப்பாடுபட்டாவது அவர்களது ஆசையை நிறைவேற்றுவர்.
அப்படித்தான் இந்தப் படத்தில் டிராகனின் ஆசையையும் அவன் போற வழி சரியா, தப்பான்னு கூட பார்க்காமல் நிறைவேற்றி விடுகிறார் அப்பா ஜார்ஜ் மரியான். அதே போல கிளைமாக்ஸ் காட்சியில் அவன் துவண்டுவிழும்போது தாங்கிப் பிடிக்கிறார். அந்த வகையில் பையன் வாழ்க்கையில் தோற்றுப்போனால் அவனைத் தூக்கி விடும் முதல் கை அப்பாவுடையதாகத் தான் இருக்கும்.இது எழுதப்படாத தியரி.
இப்படிப்பட்ட கிளைமாக்ஸ் உள்ள படங்கள் எதுவாக இருந்தாலும் அது ஜெயித்து விடும். உதாரணத்திற்கு சிவகார்த்திகேயனின் டான், மற்றும் விஜய் நடித்த லவ் டுடே படங்களைச் சொல்லலாம். அதே போல ஜார்ஜ் மரியானுக்குப் பதிலாக இந்த வேடத்தில் ஆடுகளம் நரேனைப் போட்டால் செட்டாகாது.
ஏன்னா தமிழகத்தில் உள்ள அந்த உணர்வுப்பூர்வமான அப்பாக்களின் பாசத்தை ஜார்ஜ் மரியானின் முகம் நன்றாக வெளிப்படுத்தும் என்பதை இயக்குனர் விரல்நுனியில் தெரிந்து வைத்துள்ளார். அதனால்தான் படம் இன்றைய 2கே கிட்ஸ்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.