‘பராசக்தி’ ரிலீஸ் குறித்து இயக்குனரே சொல்லிட்டாரே.. அப்புறம் என்ன கவலையை விடுங்க

By :  ROHINI
Published On 2025-05-24 15:23 IST   |   Updated On 2025-05-24 15:23:00 IST

parasakthi

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் பராசக்தி. இதற்கு முன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் மதராசி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். பராசக்தி திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் திராவிடக் கொள்கைகளை மையப்படுத்தி சில விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

அதனால் பராசக்தி திரைப்படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். இவர்களுடன் அதர்வா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீ லீலா இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கிறார். பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை பற்றி பேசும்போது பல ஊடகங்கள் இது கண்டிப்பாக ஜனநாயகன் திரைப்படத்தோடு தான் மோத போகிறது என பல பத்திரிகைகளில் எழுதி வருகின்றனர்.

ஆனால் பராசக்தி பட குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு ரிலீஸ் தேதியும் வெளியாகவில்லை.இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுதா கொங்கரா கூட பராசக்தி திரைப்படத்தில் இன்னும் 40 நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது. மதராசி திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வருகிறார். அவருக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இதனுடைய ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் தான் கூற வேண்டும். மற்றபடி ஜனநாயகன் திரைப்படத்தோடு மோதுகிறது என ஊடகங்கள் தான் எழுதி வருகின்றனர் என சுதா கொங்கரா கூறி இருக்கிறார். ஜனநாயகன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. அந்தப் படத்தின் மீதும் பெரும் அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஏனெனில் அது விஜய்யின் கடைசி படமாக இருப்பதினால் தான். அதற்கு அடுத்தபடியாக அவர் முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்தப் போகிறார் .ஆனால் சமீப காலமாகவே ஜனநாயகன் பராசக்தி இந்த இரண்டு திரைப்படங்கள் தான் ஒன்றாக மோத போகின்றன என்ற ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கின்றது. இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News