கங்குவா அடிச்ச அடி!.. ரெட்ரோ படத்தின் அவுட்புட்.. சூர்யாவ விடுங்க மக்கள் ஏத்துப்பாங்களா?..
Actor Suriya: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி இப்படம் வெளியாகி மிகப்பெரிய ட்ரோலை சந்தித்தது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகின்றார் நடிகர் சூர்யா.
ரெட்ரோ திரைப்படம்: கங்குவா திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யா கமிட்டான திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சூர்யா லைன்அப்: ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் 18 வருடங்களுக்கு பிறகு திரிஷா இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகின்றார்.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா மலையாள இயக்குனர் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படி தொடர்ந்து தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் சூர்யா நிச்சயம் ரெட்ரோ படத்தின் மூலமாக கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா ரியாக்ஷன்: ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் சூர்யாவிடம் இப்படத்தை போட்டு காட்டி இருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களிடம் படம் எதிர்பார்ப்பதை விட மிக பிரமாதமாக வந்திருக்கின்றது என பெருமையாக கூறியிருக்கின்றார்.
இதை கேள்விப்பட்ட சினிமா விமர்சகர்கள் கங்குவா திரைப்படத்தை சூர்யாவிடம் சரியாக போட்டுக் காட்டாமல் ரிலீஸ் செய்து விட்டதால் உஷாரான சூர்யா ரெட்ரோ திரைப்படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டதாக கூறப்படுகின்றது. நடிகர் சூர்யாவுக்கு இப்படம் பிடித்திருந்தாலும் ரசிகர்கள் இப்படத்தை ஏற்றுக் கொள்வார்களா? என்பது மக்கள் கையில் தான் இருக்கின்றது.
ஏனென்றால் கங்குவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மேடைக்கு மேடை படத்தை ஓவர் பில்டப் கொடுத்து பேசி வந்தார் சூர்யா. ஆனால் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் இந்த திரைப்படமும் அப்படி அமைந்து விடக்கூடாது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் ரெட்ரோ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தால் நிச்சயம் சூர்யா மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.