Bloody Beggar: எஸ்கேப்பான நெல்சன்... மாட்டிக்கிட்ட பிரபலம்!.. சம்பாதிச்ச மொத்தமும் போச்சே ப்ளடி பெக்கர்!...
பிளடி பெக்கர் திரைப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்கிய நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததாக தகவல்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்று திரைப்படங்கள் வெளியானது. இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. 4 நாட்களில் மட்டும் 135 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வரும் நாட்களில் கட்டாயம் இந்த திரைப்படம் 200 கோடி வசூல் செய்யும் என்று கூறி வருகிறார்கள்.
இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கின்றது. அதற்கு அடுத்ததாக கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் திரைப்படமும் சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படாத காரணத்தினால் குறைந்த திரையரங்குகளிலும் படம் நன்றாக ஓடியதாக தகவல் வெளியாகி இருந்தது.
4 நாட்களில் இந்த திரைப்படம் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. படமே 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த காரணத்தால் இது ஒரு லாபகரமான படம் தான் என்று கூறி வந்தார்கள். மேலும் நெல்சன் திலிப்குமாரின் உதவி இயக்குனரான சிவபாலன் அறிமுகமான திரைப்படம் பிளடி பெக்கர்.
இந்த திரைப்படத்தில் கவின் உடன் இணைந்து ராதாரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ள பலரும் நடித்திருந்தார்கள். நடிகர் கவின் பிச்சைக்காரன் வேடத்தில் மிகச் சிறப்பாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனரான நெல்சன் திலிப்குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் தமிழ்நாட்டின் வெளியிட்டு உரிமையை 5 ஸ்டார் செந்தில் என்கின்ற நபர் வாங்கி வெளியிட்டு இருந்தார். இப்படத்தை அவர் 11.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார். பைவ் ஸ்டார் செந்தில் என்ற விநியோகிஸ்தர் சமீப காலமாக சிறந்த திரைப்படங்களை வெளியிட்டு அதிக லாபம் பார்த்த ஒரு விநியோகிஸ்தர்.
பார்க்கிங், கருடன், மகாராஜா ஆகிய மூன்று திரைப்படங்களின் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையை வாங்கியவர் இவர்தான். இதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து இருந்தார். ஆனால் அந்த லாபம் அனைத்தையும் ஒரே படத்தில் விட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில் 3 கோடி ரூபாய் ஷேர் வந்தாலே அது மிகப்பெரிய ஆச்சரியம் என்று கூறி வருகிறார்கள்.
இதனால் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதில் நெல்சன் திலிப்குமார் உஷாராக முன்கூட்டியே அக்ரீமெண்டில் கண்டிஷன் போட்டு கையெழுத்து வாங்கி விட்டாராம். இதனால் அவரிடமும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கின்றார்