திமிர் காட்டும் ஓடிடிக்கள்… கோலிவுட்டின் அவல நிலை… பிரபல நடிகர்களுக்கே இப்படியா?

By :  Akhilan
Update: 2025-01-08 06:47 GMT

Vijay_dhanush

OTT: தமிழ் சினிமாவின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி வரும் நிலையில் ஓடிடிக்களும் அவர்களிடம் திமிர்காட்டி வருவதையும் பார்க்க முடிகிறது. இதுகுறித்து சில அதிர்ச்சியான தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்து இருக்கிறார்.

சில ஆண்டுகள் முன்பிருந்து தான் ஓடிடிக்கள் வளர்ச்சி அதிகரித்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே பல கோடிக்கும் படத்தினை போட்டி போட்டு முடித்தனர். தயாரிப்பாளர்களிடம் முடிவும் இருந்தது.

ஆனால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறி இருக்கிறதாம். ஓடிடி நிறுவனங்கள் ஆதிக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில் அவர்கள் முடிவெடுக்கும் நிலைக்கு வந்து இருக்கின்றனர்.

இதனால் முன்னணி நடிகர்களின் படங்களே விற்கப்படாமல் இன்னும் கிடப்பில் இருக்கிறதாம். இதுகுறித்து சித்ரா லட்சுமணன் கூறுகையில், நிறைய முன்னணி நடிகர்களின் படங்கள் விற்பனையில் பிரச்னை இல்லாமல் இருந்தது.

ஆனால் இப்போது நிலை அப்படி இல்லை. தனுஷின் நான்கு படங்கள் தயாராக இருக்கிறது. இரண்டு மூணு ஓடிடி முன்பெல்லாம் இந்த அறிவிப்பு வந்தவுடனே போட்டிக்கு வரும். ஆனாலும், இன்னமும் ஓடிடி விற்கப்படாமல் இருக்கிறது.

மலையாளத்தில் சூப்பர்ஸ்டாரான மோகன்லால் பாரோஸ் பெரிய தொகையான 35ல் இருந்து 40 கோடிக்கு விற்பனை செய்யப்படும். ஆனால் இந்த முறை பாதியாக 20 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜயின் தளபதி69 திரைப்படத்தின் ஓடிடி உரிமமே இன்னும் விற்பனை செய்யப்படாமல் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் என்னும் சூப்பர்ஹிட் திரைப்படம் வெளிவந்து சில நாட்கள் மட்டுமே ஆகிறது. ஆனால் அவரின் அடுத்த படமே இன்னும் ஓடிடிக்கு விலை படியாமல் கிடப்பில் இருக்கிறதாம். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் ரிலீஸ் முடிந்து பல மாதங்கள் கடந்தும் இன்னமும் ஓடிடிக்கு வராமல் இருக்கிறது. இந்த திடீர் பிரச்னையால் கோலிவுட் எப்படி தாக்கு பிடிக்குமோ என்பது தான் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Tags:    

Similar News