இன்று தளபதி 69 படத்தின் பூஜை... முதல்ல என்ன சீன் எடுக்க போறாங்க தெரியுமா..? ஒரே வைப் தான்..!

தளபதி 69வது திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்க உள்ள நிலையில் முதலாவதாக பாடல் காட்சிகள் எடுக்க உள்ளன.

By :  ramya
Update: 2024-10-04 03:57 GMT

vijay

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் கடைசியாக கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பாக்ஸ் ஆபிஸில் 425 கோடி வசூல் செய்திருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

இந்த திரைப்படம் தான் இவரின் கடைசி படம் என கூறப்படுகின்றது. ஏனென்றால் அரசியலில் குதித்திருக்கும் நடிகர் விஜய் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழக வெற்றிக் கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். இதன் மூலமாக 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.

கட்சி தொடங்கியது முதலே கட்சியின் பெயர் அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடி பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்த நடிகர் விஜய் வரும் 27ஆம் தேதி விக்கிரபாண்டி தொகுதியில் முதல் மாநாட்டை நடத்த இருக்கின்றார். இந்த மாநாட்டுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இப்படி ஒரு பக்கம் அரசியலில் பிஸியாக இருந்து வரும் நடிகர் விஜய் கடைசியாக தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

இந்த திரைப்படத்தை முடித்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருக்கின்றார். இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படம் தொடர்பான அப்டேட் வந்து கொண்டிருக்கின்றது. அதன்படி இந்த திரைப்படத்தை ஹச்.வினோத் இயக்க இருக்கின்றார். அனிருத் இசையமைக்க இருக்கின்றார்.

மேலும் கேவிஎன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கின்றது. தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக படத்தில் நடிக்கும் காஸ்டிங் தொடர்பான அப்டேடுகளை இந்த நிறுவனம் வெளியிட்டு வந்தது. அதன்படி பாபி தியோல், பூஜா ஹெக்டே, மம்தா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும், நாளை இப்படத்தின் முதல் காட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி நாளை இப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த பாடல் காட்சியை கோட் திரைப்படத்தில் 'மட்ட' பாடலை இயக்கியிருந்த கொடியோகிராபர் சேகர் நடனம் அமைக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News