லால் சலாம் கற்பித்த பாடம்... அலார்ட்டான ரஜினி!

நான் யானை அல்ல... குதிரை விழுந்தா டக்குன்னு எழுந்துடுவேன்...!

By :  sankaran
Update: 2024-10-04 10:40 GMT

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வரும் 10ம் தேதி வெளிவர உள்ள படம் வேட்டையன். ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத்பாசில், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் மனசிலாயோ பாடல் மற்றும் டிரைலர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வருவதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

இந்தப் படத்திற்கு முன்னாடி ரஜினியோட தர்பார், லால்சலாம் தோல்வியால் விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு தரவில்லை. அதனால் இந்தப் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் வருமா, வராதான்னு இப்போ பார்க்கலாம்.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அப்போ லைகா நிறுவனத்தைப் போய் விநியோகஸ்தர்கள் மொய்த்து விட்டார்கள். உடனே அடுத்த படத்தைப் பண்ணும்போது நிச்சயமா திருப்பித் தர்றோம்னு சொன்னாங்களாம். ஆனால் லால் சலாம் பண்ணும்போது அதை கோட்டை விட்டு விட்டார்களாம். அதை ரஜினி பட லிஸ்ட்லயே அவங்க வைக்கலயாம்.

இப்போ வேட்டையன் வருவதால செக் வைக்கலாம்னு நினைக்கிறாங்களாம். எங்களுக்கு வட்டியோட அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கன்னு கேட்குறதுக்காக பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சிட்டாங்களாம்.

அநேகமா நாளை பிரஸ்மீட் இருக்க வாய்ப்பும் இருக்குதாம். வழக்கமா படம் ரிலீஸ்சுக்குப் பிறகு தான் இப்படி நிப்பாங்க. ஆனா இப்போ படம் ரிலீஸ்சுக்கு முன்னாடியே நின்னுட்டாங்களேன்னு கேட்டதுக்கு அந்தப் பிரச்சனையைத் தடுக்கத் தான் இப்போ ரஜினி அலார்ட் ஆகி விட்டாராம்.

என்னன்னா படம் இப்போதெல்லாம் நடிக்க ஒத்துக்கிடும்போதே என்னோட பிரச்சனைகள் எல்லாம் நீங்க பார்த்துக்கணும். அப்புறம் படம் ஓடலைன்னு என் வீட்டு வாசல்ல வந்து நிக்கக்கூடாதுன்னு கறாரா சொல்லி விடுகிறாராம். மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் தெரிவித்துள்ளார்.

ஆனால் வேட்டையன் படத்தைத் தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் ரிலீஸ் பண்ணுகிறது. உதயநிதி ஸ்டாலின் முன்னாடி அமைச்சராகத் தான் இருந்தார். இப்போது துணை முதல்வர்னு இந்த விநியோகஸ்தர்களு;கு எல்லாம் தெரியுமான்னு குண்டைத் தூக்கிப் போடுகிறார் வலைப்பேச்சு பிஸ்மி. 

Tags:    

Similar News