தெலுங்கு படத்தை ஆட்டைய போட்டா தெரியாதா? தளபதி69 இந்த படத்தின் கதைதானாம்!..

விஜய் நடிப்பில் தளபதி69 நாளை முதல் ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது.

By :  Akhilan
Update: 2024-10-04 12:00 GMT

Thalapathy69: தமிழ் சினிமாவில் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாக இருக்கும் தளபதி 69 படத்தின் கதை குறித்த சுவாரஸ்ய அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொண்டு சினிமாவிலிருந்து விலக்குவதாக அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதன்படி கோட் திரைப்படம் முடிந்த நிலையில் இன்னும் தளபதி69 மட்டுமே மீதம் இருக்கிறது.

இப்படத்தை ஹெச் வினோத் இயக்க கேபிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. வெள்ளை வேஷ்டிகள் நடிகர் அக்மார்க் அரசியல்வாதி கெட்டப்பில் பூஜையில் கலந்து கொண்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது. தொடர்ந்து பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தளபதி 69 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படத்தின் தழுவலாக தான் இருக்கும் என ஒரு தகவல் தற்போது கசிந்து இருக்கிறது. அரசியல் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த கமர்சியல் திரைப்படம் 30 சதவீதம் பகவந்த் கேசரியின் கதையை ஒத்ததாகவே இருக்கும்.

சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடிப்பில் அனில் ரவிபுடி எழுதிய திரைப்படம் தான் பகவந்த் கேசரி. இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஹிட் அடித்ததும் வசூலை குவித்ததும் குறிப்பிடத்தக்கது. அரசியல் வாழ்க்கைக்குள் நுழைய இருக்கும் விஜய் தன்னுடைய கடைசி திரைப்படம் அரசியல் சார்ந்து தான் இருக்க வேண்டும் என முடிவு எடுத்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பில் துப்பாக்கி உள்ளிட்ட சில குறியீடுகள் இருப்பதை பார்த்தால் விஜய் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதை வைத்து பார்க்கும்போது பகவந் கேசரி திரைப்படத்தின் கதை தான் என்பது மேலும் உறுதியாவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News