இது எதுக்குடா வம்பு.. ‘கூலி’ டீஸர் ரெடியா இருந்தும் ரிலீஸ் ஆகாததற்கு காரணம்! டீசண்டா ஒதுங்கிய லோகி

By :  Rohini
Update:2025-03-15 12:35 IST

ஒரே நாளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த நடிகர்களின் ரசிகர்களுக்குள் ஏற்படும் மோதலை யாருமே சமாளிக்க முடியாது. அதுவும் இப்போது அனைவரின் பொழுது போக்காக இருப்பது சோசியல் மீடியா. அதிலும் ரசிகர்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல் கண்டபடி தன்னுடைய நடிகன்தான் பெருசு என எதிர் நடிகரின் ரசிகனுடன் போட்டி போட்டு சண்டை போட்டு வருவதை நாம் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் மற்றும் கூலி படத்தின் டீசர் ஆகிய இரண்டும் வருவதாக தகவல் வெளியானதும்

அதனால் ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்தார்கள்ம் ஆனால் குட் பேட் அக்லி படத்தின் டீசர் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரிய கூஸ்பம்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வீடியோ டீசரை விட அதனுடைய மேக்கிங் வீடியோ தான் அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கிறது. அந்த மேக்கிங் வீடியோவில் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்க போகிறது .முழுக்க முழுக்க இது ரசிகர்களுக்கான படமாக தான் உருவாகி இருக்கிறது என்பது இந்த மேக்கிங் வீடியோவில் இருந்தே நமக்கு தெரிகிறது.

அதுவும் ஒவ்வொரு காட்சியையும் முடிக்கும் பொழுது அதை ஒரு ரசிகனாக ஆதிக் எந்த அளவு ரசிக்கிறார் என்பதையும் அதில் பார்க்க முடிகிறது. கடைசியில் அது என அஜித் சொல்லும்போது அதை ஆதிக்கும் எந்த அளவுக்கு ரசித்தார் என்பது கண்கூடாக தெரிந்தது. ஒரு காட்சியில் அஜித் காலில் ஆதிக் விழவே போய்விட்டார். இன்னொரு பக்கம் கூலி படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அந்தப் படத்தின் சில புகைப்படங்கள் மட்டுமே வெளியானது.

இதைப் பற்றி வலை பேச்சு அந்தணன் கூறும் பொழுது கடைசி நிமிடத்தில் அனிருத் அவருடைய இசை பணியை எல்லாம் முடித்து கொடுத்துவிட டீசரையும் லோகேஷ் ரெடியாகத்தான் வைத்திருந்தார். ஆனால் குட்பேட்அக்லி படத்தின் டீசர் மேக்கிங் வீடியோவை பார்த்து இந்த நேரத்தில் கூலி படத்தின் டீசரை வெளியிட்டால் அது சரி வராது என்று கூட நினைத்திருக்கலாம்.

இன்னொரு விஷயம் எதிர்காலத்தில் லோகேஷ் கனகராஜுடன் அஜித் இணைய வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் இது மாதிரி சில விஷயங்களில் மோதல் புகையை கடைப்பிடிப்பது நன்றாக இருக்காது என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் கூலி படத்தின் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அதில் ரஜினி கையை வைத்து நிற்கிறது எல்லாம் மிகவும் சூப்பராக இருக்கிறது.

ரஜினி எப்பொழுதுமே உலகத்தின் எட்டாவது அதிசயம் தான். இந்த வயதிலேயே அவருடைய ஸ்டைலும் நடையும் பார்வையும் எல்லாருமே ரசிக்கும்படியாக இருக்கும். இந்த நேரத்தில் குறிப்பிட்ட ஒரு நான்கு புகைப்படம் மட்டும் தான் வெளியாகி இருக்கின்றது. இது ஒரு டீசருக்கு உண்டான மன நிறைவை கொடுத்ததா என்றால் இல்லை. ஆனால் தனியாக ஒரு புகைப்படமாக பார்க்கும் பொழுது அடடா சூப்பராக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அதனால் கூலி படத்தின் அந்த புகைப்படங்கள், குட் பேட் அக்லி படத்தின் மேக்கிங் வீடியோ என இரண்டுமே பாராட்டும் அளவில் இருக்கிறது என்று கூறினார்.

Tags:    

Similar News