அவசரப்பட்ட விண்வெளி நாயகன்!.. இப்போ தக் லைஃப் ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா?..
வரும் மே 17ம் தேதி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை ரசிகர்களுடன் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன்.;
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் 1987ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தை பல இயக்குநர்களை வைத்து கமல்ஹாசன் உருவாக்கினார் என ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் வெடித்தன. நாயகன் படம் கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தாலும் அதன் பிறகு அவர் பல வருடங்களாக மணிரத்னம் இயக்கத்தில் இணையவில்லை.
தக் லைஃப் படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைய காரணம் என்ன? என்றும் இத்தனை ஆண்டுகள் ஏன் பிரிவு என்கிற கேள்விக்கு பல கதைகள் பேசுவோம், ஆனால், முடிவு பண்ண மாட்டோம். இதை முடிவு பண்ணினோம், படத்தையும் பண்ணிவிட்டோம் என கமல்ஹாசன் தக் லைஃப் பதில் அளித்திருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த வாரம் மே 16ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டு இருந்தார். ஆனால், திடீரென இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் நிலவிய உடனே நாடு தான் முக்கியம் என மே 16ம் தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்தார்.
இந்நிலையில், தற்போது வரும் மே 17ம் தேதி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை ரசிகர்களுடன் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன். அதன் பிறகு இசை வெளியீட்டு விழாவை வரும் மே 24ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து முதன் முறையாக சிம்பு நடிக்கிறார். மேலும், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூன் 5ம் தேதி திட்டமிட்டபடி படம் வெளியாகவுள்ள நிலையில், மே 17ம் தேதி முதல் தக் லைஃப் டீம் சூறாவளி ப்ரோமோஷனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.