பக்கா கேங்ஸ்டர் ஆக்‌ஷன் ரிவென்ச்!.. வில்லனாக சிம்பு!.. தக் லைப் முழு கதை இதுதான்!..

By :  MURUGAN
Update: 2025-05-21 02:47 GMT

மணிரத்னமும் கமலும் 36 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அப்படி உருவாகியுள்ள தக் லைப் படத்தில் கமலுடன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கமல் எழுதிய கதையை மணிரத்னம் தனது ஸ்டைலில் இயக்கியுள்ளார். சரி.. தக் லைப் படத்தின் முழு கதை என்ன?. வாங்க பார்ப்போம்!...


குற்றங்கள் செய்யும் மாபியா உலகில் இருக்கும் ரங்கராய சக்திவேல் நாயக்கர்( கமல்) மற்றும் அவரின் சகோதரர் மாணிக்கம் இருவரையும் போலீசார் என்கவுண்டர் செய்ய முயற்சி செய்யும்போது அமரன் (சிம்பு) என்கிற சிறுவன் அவர்கள் இருவரையும் காப்பாற்றுகிறான். எனவே, அமரனை ரங்கராய சக்திவேல் தனது மகனாக பாவித்து தத்தெடுத்து வளர்க்கிறார். அமர் வாலிபனாக வளர்ந்த நிலையில் ரங்கராய சக்திவேல் அண்டர்வேல்ட் தாதாவாக மாறியிருக்கிறார். மனைவி அபிராமியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் அவர் ஒரு பெண்ணுடன் (திரிஷா) ரகசிய உறவிலும் இருக்கிறார்.

சக்திவேல் தனது கேங்ஸ்டர் கும்பலுக்கு சிம்புவை தலைவனாக நியமிக்கிறார். எல்லா பொறுப்புகளையும் அமரனிடம் வருகிறது. மேலும், அமரன் மீதுள்ள அன்பு மற்றும் நம்பிக்கையில் தனது மகளையும் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார் சக்திவேல். ஆனால், ரங்கராய சக்திவேலின் அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்கிற ஆசை அமரனுக்கு வருகிறது. சக்திவேலின் தம்பி மாணிக்கத்துடன் கை கோர்த்து ரங்கராய சக்திவேலை கொல்ல திட்டமிடுகிறார். சக்திவேலை கொன்றுவிட்டதாக அவர்கள் நம்பும் நிலையில் சக்திவேல் உயிர் தப்புகிறார்.


அமர் முழு அண்டர்வேல்டையும் கைப்பற்றிவிடுகிறார். தன்னை கொலை செய்ய முயற்சி செய்தது அமரனே என சந்தேகிக்கும் ரங்கராய சக்தி வேல் அவரையும், தனக்கு துரோகம் செய்த தனது தம்பி மாணிக்கத்தையும் பழி வாங்க வருகிறார். இறுதியில் என்னவானது என்பதே படத்தின் கதை. கதையின் ஓட்டத்தை பார்க்கும் போது சிம்புவை கமல் கொன்றுவிடுவது போல கிளைமேக்ஸ் இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

டிரெய்லரிலேயே கமலும், சிம்புவும் அதிரடியாக மோதிக்கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எனவே, ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு இப்படம் சூப்பர் ட்ரீட்டாகவே அமையும் என நம்பப்படுகிறது. அதோடு, சிம்புவை இதுவரை யாரும் வில்லனாக பார்த்தது இல்லை. இந்த படத்தில் வில்லனாக, அதுவும் கமலுக்கு வில்லனாக நடித்திருப்பது கண்டிப்பாக ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. ஒருபக்கம், கமல் ரசிகர்களுக்கும் இப்படம் முழு திருப்தியை கொடுக்கும் என்றே நம்பப்படுகிறது.

Tags:    

Similar News